ஆசிய கோப்பை 2023: அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடிக்கும் ஜாக்பாட்

பதினொரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பார் என TOI தெரிவித்துள்ளது  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 20, 2023, 03:13 PM IST
  • பும்ராவுக்கு அடுத்த ஜாக்பாட்
  • பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு
  • விரைவில் இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை 2023: அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடிக்கும் ஜாக்பாட் title=

காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். அதுவும் இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவருக்கு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னொரு ஜாக்பாட்டை கொடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதில் ஆசிய கோப்பையில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்த அவருக்கு பக்கபலமாக பும்ராவை துணைக் கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | உலகக்கோப்பை தொடரில் பாண்டியாவுக்கு பின்னடைவா - பிசிசிஐயின் பிளான் என்ன?

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் சரிபார்க்க முடிவு செய்திருக்கிறது. அதில் வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனையொட்டி திங்கட்கிழமை டெல்லியில் பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் இருவரும் இந்த கூட்டத்தில் உடல் ரீதியாக கலந்து கொள்வார்களா அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில் முக்கிய வீரர்களான கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்னும் தங்கள் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதால் இது குறித்து ஆலோசிக்க இருக்கின்றனர். அவர்கள் ஒருவேளை விளையாட முடியாமல் போனால் மாற்று வீரர்கள் பட்டியலில் யாரை சேர்ப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. 

மேலும் படிக்க | IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News