Serie A தொடர்பான அறிவிப்பு வெளியானது; இயல்பு நிலைக்கு திரும்பியதா இத்தாலி...

இத்தாலியின் Serie A கால்பந்து போட்டி ஜூன் 20 அன்று மீண்டும் தொடங்கவுள்ளதால், நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கருதப்படுகிறது!

Last Updated : May 29, 2020, 10:17 PM IST
Serie A தொடர்பான அறிவிப்பு வெளியானது; இயல்பு நிலைக்கு திரும்பியதா இத்தாலி...  title=

இத்தாலியின் Serie A கால்பந்து போட்டி ஜூன் 20 அன்று மீண்டும் தொடங்கவுள்ளதால், நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கருதப்படுகிறது!

கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் Serie A காலபந்து போட்டி, மூன்று மாத லாக்டவுனுக்குப் பின், ஜூன் 20-ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளது. இத்தாலிய கால்பந்து தலைவர்கள் முன்மொழிந்துள்ள சுகாதார நெறிமுறையை பின்பற்ற,  அரசின்தொழில்நுட்ப மற்றும் அறிவியல் குழு ஒப்புக் கொண்டுள்ளது என்று விளையாட்டு துறை அமைச்சர் வின்சென்சோ ஸ்படபோரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பில்., "இத்தாலி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. எனவே கால்பந்து விளையாட்டும்,  இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும், அதுவே  சரியானது" என்று ஸ்படாபோரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்., "கூட்டமைப்பு, எனக்கு திட்டம் B மற்றும் திட்டம் C இருப்பதாக உறுதியளித்தது. இந்தஆலோசனைகளை பின்பற்றி, ஜூன் 20 அன்று சாம்பியன்ஷிப் போட்டி மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இத்தாலிய கால்பந்து சம்மேளனத்தின் (FIGC) தலைவர் கேப்ரியல் கிராவினா வீடியோ கான்ஃபரென்ஸிங்-ன்  போது அமைச்சரிடம், சாம்பியன்ஷிப்பை மீண்டும் தடைபட்டால்,  பிளே-ஆஃப் முறை கடைபிடிக்கப்படும் என்றும், ஆட்டம் நிறுத்தப்பட்டால்,  தற்போதையை நிலை கடைபிடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக மார்ச் 9-ஆம் தேதி சசுவோலோ 3-0 என்ற கோல் கணக்கில்ப்ரெசியாவை வீழ்த்தியதிலிருந்து இத்தாலியில் உயர்மட்ட அளவிலான போட்டிகள் எதுவும் நடைப்பெறவில்லை. 

கொரோனா தொற்றுநோயால் 33,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தற்போது கால்பந்து போட்டிகளை நடத்த திட்டமிடப்படுகிறது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் தற்போது கால்பந்து தொடர் நடத்தப்பட இருப்பது நாட்டில் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

மொழியாக்கம் : ஹேமாலதா.எஸ்

Trending News