கொச்சி: 3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ்- புனே சிட்டி அணிகள் மோதின. புனே அணியை வென்றது கேரளா
7-வது நிமிடத்திலேயே கேரள அணி கோல் அடித்து குழுமியிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. டக்கென்ஸ் நஜோன் இந்த கோலை அடித்தார். பிற்பாதியில் 57-வது நிமிடத்தில் சி.கே.வினீத் தட்டிக்கொடுத்த பந்தை, கேரள கேப்டன் ஆரோன் ஹியூஸ் தலையால் முட்டி கோலாக்கினார். பதில் கோல் திருப்ப போராடிய புனே அணி கடைசி நிமிடத்தில் ஒரு கோல் போட்டது.
முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது. கேரள அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.