’சிஎஸ்கேவின் சொத்து இவர் தான்’ - சுரேஷ் ரெய்னா சொல்லும் அந்த இளம் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் பத்திரனா என  சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அவருடைய பந்துவீச்சு மிக துல்லியமாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2023, 09:45 AM IST
  • சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம்
  • பத்திரனாவுக்கு சுரேஷ் ரெய்னா புகழாரம்
  • சின்ன மலிங்கா இப்போது சிஎஸ்கேவில் இருக்கிறார்
’சிஎஸ்கேவின் சொத்து இவர் தான்’ - சுரேஷ் ரெய்னா சொல்லும் அந்த இளம் வீரர் title=

சுரேஷ் ரெய்னா வருகை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகினாலும், சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வந்துவிடுகிறார். அப்போது முன்னாள் வீரர்களுடன் கலகலப்பாக உரையாடும் அவர், இளம் வீரர்களுக்கு ஆலோசனையும் கொடுத்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக சேப்பாக்கத்தில் விளையாடிய போட்டிக்கும் நேரில் வந்திருந்த சுரேஷ் ரெய்னா, பத்திரானாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பத்திரனா உயர்ந்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார். 

மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்

பத்திரனாவுக்கு புகழராம்

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது, சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அனுபம் வாய்ந்த பவுலர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக பவுலிங் செய்கின்றனர். குறிப்பாக பத்திரனா பவுலிங் தரமாக இருக்கிறது. அவருடைய வேகம் மற்றும் துல்லியம் மிக அற்புதமாக இருப்பதை கண்டு வியக்கிறேன். அவர் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார். அப்போது சென்னை அணி மலிங்காவை தவறவிட்டுவிட்டது. ஆனால் இப்போது அவருக்கு இணையாக ஜூனியர் மலிங்கா கிடைத்திருக்கிறார். இன்னும் பல உயரங்களை அவர் எட்டுவார் என புகழாரம் சூட்டினார். 

சென்னை அணி வெற்றி

அண்மையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பத்திரனா சிறப்பாக பந்துவீசினார். அவருடைய துல்லியமான பந்துவீச்சால் இறுதி கட்டத்தில் மும்பை அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் மிக குறைவான ரன்களையே வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலிலும் டாப் 4-க்குள் நுழைந்தது.

மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News