20 ஓவர் கிரிக்கெட் உலகில் பிரம்மாண்டமான தொடராக இருக்கும் ஐபிஎல் 2023 அகமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை ஐபிஎல் சாம்பியனான எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் கோலாகல தொடக்க விழாவுக்குப் பிறகு இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கண்கவர் வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமா பிரபலங்களின் மயக்க வைக்கும் நடனங்களும் இந்த ஐபிஎல் தொடக்க விழாவில் அரங்கேற இருக்கின்றன.
அத்துடன் புதிய விதிமுறைகளும் ஐபிஎல் 2023 நடைமுறைக்கு வர இருக்கிறது. இம்பாக்ட் பிளேயர் மற்றும் டாஸ் போட்ட பிறகு பிளேயிங் லெவன் அறிவித்தல் ஆகியவை முதன்முறையாக இந்த ஐபிஎல் போட்டியில் கடைபிடிக்கப்பட இருக்கிறது. என்னென்ன விதிமுறை மாற்றங்கள் ஐபிஎல் 2023 தொடரில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் காண்பிக்கும் ரிலையன்ஸ் அம்பானி
1. பிளேயிங் லெவன் அறிவிப்பு
எப்போதும் டாஸ் போடும்போது தங்கள் அணி விளையாடும் பிளேயிங் லெவனை ஆட்ட நடுவரிடம் இரு அணி தலைவர்களும் கொடுப்பார்கள். இப்போது அந்த விதிமுறைக்கு பதிலாக டாஸ் போட்ட பிறகு பிளேயிங் லெவனை அறிவித்தால்போதும்.
2. இம்பாக்ட் பிளேயர்:
'இம்பாக்ட் பிளேயர்' விதியானது, ஆட்டத்தின் எந்த நேரத்திலும் விளையாடும் லெவன் அணியில் ஒரு வீரரை மாற்றுவதற்கு அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாற்று வீரர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்ய முடியும். கேப்டனாக அணியை வழிநடத்த முடியாது.
3. டிஆர்எஸ்
ஐபிஎல் 2023 சீசனில் வைடு மற்றும் நோ-பால்களுக்கு டிஆர்எஸ் அப்பீல் செய்யலாம். கள நடுவரின் வைட்-பால் மற்றும் நோ-பால் முடிவில் அதிருப்தி இருந்தால் பேட்டிங் செய்யும் அணி அதனை எதிர்த்து அப்பீல் செய்ய முடியும். கடந்த சீசன்களில் கள நடுவர்களின் இத்தகைய முடிவு போட்டியின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்ச்சையாக மாறியது. இதனை போக்க இந்த புதிய விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
4. விக்கெட் கீப்பர் தண்டனை
ஸ்டம்புகளுக்கு பின்னால் இருக்கும் விக்கெட் கீப்பர்கள் பேட்ஸ்மேன் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே அவுட்டாக்குவதற்கு ஏதேனும் முயற்சி எடுத்தால் அவர்களுக்கு தண்டிக்கப்படுவார்கள்.
5. ஓவர்ரேட் அபராதம்
ஐபிஎல் 2023-ல் அணிகளின் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர் வீசி முடிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீச வில்லை என்றால் காலதாமதமாக வீசும் ஒவ்வொரு பந்துக்கும் பீல்டிங் அணியில் 30 யார்டு வட்டத்துக்குள் கூடுதல் பிளேயர் பீல்டிங் செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள். இது பேட்டிங் அணிக்கு சாதகமாக இருக்கும்.
மேலும் படிக்க | IPL 2023: முதல் நாளை கெடுக்குமா மழை... அகமதாபாத்தில் வானிலை நிலவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ