Rohit Sharma: ஜெய்ஸ்வால்கிட்ட பவர் எங்கிருந்து வருதுன்னு கேட்டேன் - ரோகித் சர்மா கலகலப்பான பேச்சு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதமடித்த 21 வயதான இளம் வீரர் ஜெய்ஷ்வால் கிட்ட பவர் எங்கிருந்து வருதுன்னு கேட்டேன், ஜிம்முக்கு போறேன்னு சொன்னாரு என ரோகித் சர்மா கலகலப்பான பேசினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 1, 2023, 02:44 PM IST
Rohit Sharma: ஜெய்ஸ்வால்கிட்ட பவர் எங்கிருந்து வருதுன்னு கேட்டேன் - ரோகித் சர்மா கலகலப்பான பேச்சு title=

ஐபிஎல் 1000வது போட்டி

ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இப்போட்டியில் மோதின. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கிய இந்தப் போட்டி விறுவிறுப்பின் உச்சமாகவும், ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்த போட்டியாக இருந்தது.  

ஜெய்ஷ்வால் சதம்

இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா என முன்னணி பந்துவீச்சாளர்களையும் தைரியமாக எதிர்கொண்டு சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசி தள்ளினார். அவருடைய ஆட்டத்தை ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே ரசிக்க தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க | IPL 2023: வழக்கம்போல் BP-ஐ எகிறவைத்த போட்டி... இதுதான் பிரச்னை - தோல்விக்கு பின் தோனி சொன்னது என்ன?

மும்பை அதிரடி

இதனைத் தொடர்ந்து சேஸிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினாலும், பின்னர் வந்த வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். கேம்ரூன் கிரீன் மற்றும் சூர்ய குமார் யாதவ் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் மும்பை அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது. 44 ரன்களில் இருந்தபோது சிக்ஸ் அடித்து அரைசதம் அடிக்கலாம் என்று நினைத்த கிரீன் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி அவுட்டானார்.  

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

இறுதிக்கட்டத்தில் சிக்சரும் பவுண்டரிகளுமாக மைதானத்தில் பறந்து கொண்டிருந்தது. குறிப்பாக டிம் டேவிட் பந்துகளை சிக்ஸர்களிலேஏ டீல் செய்து கொண்டிருந்தார். அவரின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 3 பந்துகள் மீதம் வைத்து 212 ரன்களை சேஸ் செய்து, ஐபிஎல் 1000வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். ராஜஸ்தான் அணியில் ஜேசன் ஹோல்டர் 21 பந்துகளில் 55 ரன்களை வாரி வழங்கினார். 

கேப்டன் ரோகித் சர்மா நெகிழ்ச்சி 

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஆட்டத்திலும் நாங்கள் இலக்கை நெருங்கி வந்தே இங்கு தோற்றோம். இதனால் இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது.

சூரிய குமாரின் இன்னிங்ஸ் முக்கியத்துவமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஜெய்ஸ்வால் போட்டிகளை இந்த ஆண்டு அடுத்த கட்டத்திற்கு ஆட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவரிடம் உனக்கு எங்கிருந்து பவர் கிடைத்தது என்று கேட்டேன். அவர் ஜிம்முக்கு போகிறேன் என்று சொன்னார். ஜெய்ஷ்வால் சிறப்பாக விளையாடுவது இந்தியாவுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கும் நல்லது” என்று கலகலப்பாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | டென்ஷனான போட்டிகளுக்கு மத்தியில் ‘ஜில்’லாகும் RCB கிரிக்கெட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News