IPL 2023 CSK vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதிய இப்போட்டி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்போட்டியை வென்றால், சென்னை பிளேஆப் தொடருக்கு தகுதிபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில், போட்டியின் டாஸை வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே ஆகியோர் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். ருதுராஜ் 17, ரஹானே 16 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தனர். நிதானம் காட்டிய கான்வே 30 ரன்களில் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்தார்.
தூபே ஆறுதல்
அடுத்து வந்த ராயுடு 4, மொயின் அலி 1 ஆகியோர் ஒரே ஓவரில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தூபே - ஜடேஜா ஜோடி கடைசி ஓவர் வரை தாக்குபிடித்தது. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய தோனியால் 2 ரன்களை மட்டுமே 2 பந்துகளில் எடுக்க முடிந்தது. zeenews.india.com/tamil/sports/ipl/please-do-not-hurt-fans-this-former-indian-player-humble-request-to-ms-dhoni-444354
மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபிக்கு மிகப்பெரிய வெற்றி... 59 ரன்களுக்கு ராஜஸ்தான் ஆல்-அவுட்!
145 ரன்கள் இலக்கு
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை சென்னை அணி எடுத்தது. தூபே 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 48 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேகேஆர் பந்துவீச்சில் நரைன், சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ரிங்கு - ராணா ஜோடி
145 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கம் நன்றாக அமையவில்லை. குர்பாஸ் 1, வெங்கடேஷ் ஐயர் 9, ஜேசன் ராய் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரிங்கு சிங், கேப்டன் ராணாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை சென்னை அணியால் பிரிக்கவே முடியவில்லை எனலாம். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் அரைசதம் அடித்து ரன்அவுட்டானார்.
ஆட்டநாயகன் ரிங்கு
18.3 ஓவரில் ராணாவின் வின்னிங் ஷாட்டால் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக ராணா 57 ரன்களையும், ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் தீபக் சஹார் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ரிங்கு சிங் தேர்வானார்.
புள்ளிப்பட்டியில் 15 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் நீடிக்கிறது. இரு அணிகளும் தலா 13 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில் தலா 1 போட்டி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ