டெல்லி vs கொல்கத்தா: டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) இன்று (புதன்கிழமை) ஒரு முக்கியமான போட்டியில் சந்திக்கின்றன. ஐபிஎல் 2021 இன் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. கே.கே.ஆர் மற்றும் டி.சி இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த போட்டி இருவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தோல்வியடையும் அணியின் ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு தகர்ந்து விடும். அதே சமயம், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) எதிர்கொள்ள வேண்டும். எலிமினேஷன் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (RCB) தோற்கடித்து கொல்கத்தா குவாலிபையர் -2 க்குள் நுழைந்துள்ளது கே.கே.ஆர் மற்றும் முதல் தகுதிச்சுற்றில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்ததால், இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணி விளையாடுகிறது.
நடப்பு சீசனில் இருஅணிகளின் பர்பாமன்ஸ்:
நடப்பு சீசனில் இதுவரை கொல்கத்தா மற்றும் டெல்லி இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இந்தியாவில் நடைபெற்றது (ஐபிஎல் 2021 முதல் கட்டம்) . அதில் டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் கே.கே.ஆர் 20 ஓவரில் 154/6 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது.
ALSO READ | IPL KKR VS RCB: 4 விக்கெட் வித்தியாசத்தில் KKR அணியிடம் தோற்றது RCB
யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்?
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கடைசி ஐந்து போட்டிகளைப் பற்றி பார்த்தால், டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தி வருவது தெரியும். டெல்லி மூன்று போட்டிகளில் வெற்றியை சுவைத்துள்ளது. கொல்கத்தா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் குவாலிஃபையர் 2 போட்டியில் கே.கே.ஆருக்கு எதிரான அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனென்றால், எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிசி போன்ற வலுவான அணியை கே.கே.ஆர் தோற்கடித்து மன வலிமையுடன் இருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
நேருக்கு நேர் மோதல் - யார் முன்னிலை வகிக்கிறார்கள்?
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் கே.கே.ஆர். அணியின் கை ஓங்கி இருந்தாலும், டெல்லி அணியும் வெற்றி விகிதத்தில் கேகேஆரை விட வெகு தொலைவில் இல்லை. டெல்லிக்கு எதிராக கொல்கத்தா இதுவரை 15 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல டெல்லி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டியில் முடிவு இல்லை.
ALSO READ | IPL 2021 CSK VS DC: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஆனால் கே.கே.ஆர் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. அதே நேரத்தில், டெல்லியில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. கடந்த ஆண்டு டெல்லி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் மும்பையிடம் தோற்றது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR