IPL 2020: சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய RCB.. வெற்றி குறித்து கோலி கூறியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது..!

Last Updated : Sep 29, 2020, 08:28 AM IST
IPL 2020: சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்திய RCB.. வெற்றி குறித்து கோலி கூறியது என்ன?   title=

மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது..!

IPL 2020 தொடரின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி சூப்பர் ஓவர் வரை சென்று மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது. படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தனர். 

AB டிவில்லியர்ஸ் கடைசி ஓவர்களில் தன் அதிரடி ஆட்டம் மூலம் பெங்களூர் அணியை 200 ரன்களை கடக்க வைத்தார். அடுத்து ஆடிய மும்பை அணி இஷான் கிஷன், பொல்லார்டு ஆட்டத்தால் போட்டியை டை செய்தது. சூப்பர் ஓவரில் பெங்களூர் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணி கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் அணியில் மாற்றங்களை செய்தது. பெங்களூர் அணிக்கு தேவ்தத் படிக்கல் 54 ரன்கள் அடித்தும், ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தும் சிறப்பான துவக்கம் அளித்தனர். விராட் கோலி மோசமாக ஆடி 11 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார் அடுத்து அதிரடி ஆட்டம் ஆடி டிவில்லியர்ஸ் 55, சிவம் துபே 27 ரன்கள் குவித்தனர்.பெங்களூர் அணி 201 ரன்களை எட்டியது பும்ரா 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தார்.

READ ALSO | SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

அடுத்து ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் 99, பொல்லார்டு 60 ரன்கள் எடுத்தனர். இவர்களில் இருவரும் கடைசி 4 ஓவர்களில் 80 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஆனாலும், போட்டி டை ஆனது. 

மும்பை அணியில் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆடியும், சைனி பந்துவீச்சை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பொல்லார்டு ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார். 8 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய பெங்களூர் டி வில்லியர்ஸ் - கோலியுடன் களமிறங்கியது. பும்ரா பந்து வீசினார். பெங்களூர் அணி சற்று தடுமாறி முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்தது, 4வது பந்தில் டிவில்லியர்ஸ் ஃபோர் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கோலி 4 அடித்தார். இந்த சீசனில் கோலி அடிக்கும் முதல் பவுண்டரி இதுதான்.

பொல்லார்டு இந்தப் போட்டியில் சூப்பர் ஓவருக்கு முன் 24 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இருந்தார். 5 சிக்ஸ் அடித்து இருந்தார். ஆனால், அவரால் சைனி பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியவில்லை. நவ்தீப் சைனியால் மட்டுமே பெங்களூர் இந்தப் போட்டியை வென்றது.

Trending News