புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் (Chennai Super Kings) மூத்த பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இல்லாதது அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் (Dean Jones) நம்புகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 193 போட்டிகளில் 5,000 ரன்களுக்கு மேல் அடித்த சுரேஷ் ரெய்னா (Suresh Raina), தனிப்பட்ட காரணங்களால் IPL 2020 சீசனில் இருந்து விலகினார்.
அவர் அணியுடன் UAE சென்றார். ஆனால் பின்னர் சில காரணங்களால் அவர் மீண்டும் வீடு திரும்பினார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான 'கேம் பிளானில்' ஜோன்ஸ் கூறுகையில், “இந்த முறை ரெய்னா CSK அணியில் இடம் பெறாமல் இருப்பது அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பாக இருக்கும். IPL-ல் மிக அதிக ரன்களை எடுத்துள்ள டாப்-5 பேட்ஸ்மேங்களில் ஒருவர் அவர். இடது கையால் ஆடும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களை விளாசித் தள்ளுவதில் வல்லவர். CSK-வின் பல ஆட்டக்காரர்கள் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால், ரெய்னா இல்லாதது அவர்களுக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.” என்று ஜோன்ஸ் தெரிவித்தார்.
ALSO READ: IPL 2020: சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக CSK-வில் சேரப்போகும் அதிரடி ஆட்டக்காரர் இவர்தானா?
ஜோன்ஸ் மேலும் கூறுகையில், "CSK அணியில் சில இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை. குறிப்பாக லெக் ஸ்பின்னருக்கு எதிராக விளையாடும்போது இது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்” என்று டீன் ஜோன்ஸ் மேலும் கூறினார்.
IPL-மிகவும் உறுதியான அணிகளில் ஒன்றான CSK இம்முறை போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே பலவித சவால்களை சந்தித்து வருகிறது. IPL-ல் முதன் முறையாக ஆடப்போகும் CSK அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
IPL-ன் 13 வது சீசன் செப்டம்பர் 19 சனிக்கிழமையன்று தொடங்க உள்ளது. மேலும் லீக்கின் முதல் போட்டி நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது.
ALSO READ: IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR