இன்று மாலை 4 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லாத நிலையில் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் குஜராத் லயன்ஸ் எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என்ற நெருக்கடியில் உள்ளது. அதேவேளையில் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப் புக்காக, புனே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.
14 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை புனேவை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் புனே அணி பஞ்சாப் அணியை வீழ்த்தினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும்.
குஜராத் அணி 13 ஆட்டத்தில் 4 வெற்றி, 9 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக விளையாடக்கூடும்.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் ரைசர்ஸ் ஐதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே.
குஜராத் லயன்ஸ்:
சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.