ஐபிஎல் 2017: 31 லீக், குஜராத் லயன்ஸ் அபார வெற்றி

Last Updated : Apr 28, 2017, 08:52 AM IST
ஐபிஎல் 2017: 31 லீக், குஜராத் லயன்ஸ் அபார வெற்றி title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் பந்து வீச தீர்மானித்தார். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

கேப்டன் விராட் கோலி, கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணியில் டையி 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனையடுத்து 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

குஜராத் அணி 1.5 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த டையி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் 7-வது 6 வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.

Trending News