INDvsSA: தென் ஆப்பிரிக்கா-விற்கு வெற்றி இலக்கு 290 ரன்கள்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா-விற்கு 290 ரன்கள் நிர்னயித்துள்ளது இந்தியா!

Last Updated : Feb 10, 2018, 09:19 PM IST
INDvsSA: தென் ஆப்பிரிக்கா-விற்கு வெற்றி இலக்கு 290 ரன்கள்! title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா-விற்கு 290 ரன்கள் நிர்னயித்துள்ளது இந்தியா!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இத்தொடரின் 4வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டகாரர் ரோகித் 5(13) ரசிகர்களை ஏமாற்றினாலும், சிகர் தவான் நிதானமாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு துணையாக கேப்டன் கோலி அபாரமாக விளையாடி 75(83) ரன்கள் குவித்தார். பின்னர் மோரிஸ் வீசிய பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவட் ஆனார்.

அவரை அடுத்து ரஹானே, தவானுடன் இணை சேர்ந்தார், எனினும் ஆட்டத்தின் 34.2 ஓவரில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

அப்போதைய நிலவரப்படி இந்தியா 34.2 ஓவர்கள் முடிய 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 107(102) மற்றம் ரஹானே 5(8) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா அணி வீரர்கள் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறினர். நிதானமாக விளையாடிய தவானும் 109(105) ரன்கள் வெளியேறினார்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 289 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்கா 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்க உள்ளது!

Trending News