இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தனர். அதன் படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணி 44.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 216 ரன்கள் இலக்கு தரப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா 7(14) ரன்கள் எடுத்த நிலையில் தனன்ஜெயா வீசிய பந்தில் ஃபோல்ட் ஆனர். ஷிகர் தவான் மற்றும் ஷிரியாஸ் ஐயர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இலங்கை எதிராகவும், தொடரந்து 2_வது ஒரு நாள் போட்டியிலும் அரைசதம் அடித்தார் ஷிரியாஸ் ஐயர். தொடர்ந்து விளையாடிய ஷிரியாஸ் ஐயர் 61(64) ரன்னுக்கு அவுட் ஆனர். அவர் 8 பவுண்டரி, ஒரு சிச்சர் அடித்தார்.
பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருவரும் நிதானமாக விளையாடினர். ஷிகர் தவான் தனது ஒரு நாள் போட்டியில் 12_வது சதத்தை பூர்த்தி செய்தார். ஷிகர் தவான் 84 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
ஷிகர் தவான் 100(85)* மற்றும் தினேஷ் கார்த்திக் 26(31) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியாக இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதினை இந்திய அணியின் "கப்பர் சிங்" ஷிகர் தவான் பெற்றார்.
இலங்கை தரப்பில் தனன்ஜெயா மற்றும் திசாரா பெரேரா தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள்.
That's it and that's a wrap. #TeamIndia do it in style and win the series 2-1 #INDvSL pic.twitter.com/ftYwFqSNYQ
— BCCI (@BCCI) December 17, 2017