இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்த போட்டியில் இருந்து விலகியதால் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
When Twitter went abuzz post the @RishabhPant17 blitz#TeamIndia | #ENGvIND pic.twitter.com/RCuVwRmy34
— BCCI (@BCCI) July 1, 2022
மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்
இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் ஆடிய ரிஷப் பந்த் சதம் விளாசி அசத்தினார். வெறும் 89 பந்துகளில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடித்து சரிந்த இந்திய அணியை மீட்டு நிறுத்தினார். பந்த் சதம் அடித்த மகிழ்ச்சியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் துள்ளி குதித்து கொண்டாடினார். பொதுவாக எல்லா சூழ்நிலைகளிலும் நிதானமாக இருக்கும் டிராவிட்டின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
The moment where it all came together for #RP17
P.S You're a special guy if you can get Rahul Dravid to react that way #ENGvIND pic.twitter.com/OBiUVllVYN
— Delhi Capitals (@DelhiCapitals) July 1, 2022
19 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 111 பந்துகளில் 146 ரன்கள் அடித்த நிலையில் பந்த் அவுட் ஆகி வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 338 ரன்கள் அடித்து இருந்தது. ஜடேஜா 83 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் உள்ளார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இலக்கும் பட்சத்தில் அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் களமிறங்கும். இந்திய அணியும் 4 பவுலர்களுடன் பவுலிங்கில் மிரட்ட தயாராக உள்ளது.
மேலும் படிக்க | அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR