விசாகபட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 455 ரன்னும், இங்கிலாந்து 255 ரன்னும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 200 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
2வது இன்னிங்சில் 405 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. கடைசி நாளான இன்று 318 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனையடுத்து அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹமீத் 25 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். குக் 54 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 5 ரன்னுடன் களத்தில் நின்றார். கை வசம் 8 விக்கெட் இருந்த நிலையில், வெற்றிக்கு கடைசி நாளில் 318 ரன் தேவை என்ற இலக்குடன் இங்கிலாந்து இன்று களமிறங்கியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 158 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்நிலையில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது நினைவிருக்கலாம்.