IND vs WI: இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது!

கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறும் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது.

Last Updated : Dec 23, 2019, 08:22 AM IST
IND vs WI: இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது! title=

கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறும் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றியோடு, தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டார்.

எவின் லீவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது லீவிஸ் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷாய் ஹோப் உடன் ராஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். 

ஷாய் ஹோப் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 33 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சேஸ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் 31.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். கடைசி ஐந்து ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ரன்கள் குவித்தது. நவ்தீப் சைனி வீசிய 46-வது ஓவரில் பூரன் 3 பவுண்டரி விளாசினார்.

கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு துரத்தினார் பொல்லார்டு. இந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது.

பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.

21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 38.5 ஓவரில் 228 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலையில் இருந்தது .

6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் ஜடேஜா விளையாடினார். 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Trending News