ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை முடிந்த கையுடன் இந்திய அணி, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில், முதல் போட்டி மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியை இந்தியா வென்றது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி மற்றும் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதிலும், மழை குறுக்கிட்டதால் டக்-வெர்த் லீவிஸ் முறையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் ஹர்திக் தலைமமையிலான இந்திய அணி தொடரை வென்றது.
இதையடுத்து, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா விளையாட உள்ளது. இதில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ள நிலையில், ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணியை வழிநடத்துகிறார்.
— BCCI (@BCCI) November 23, 2022
மேலும் படிக்க | திருந்த மாட்டார்கள்! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்!
ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை தொடரை மனதில் வைத்து இனிவரும் ஒவ்வொரு போட்டியும் அணுகப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளைய போட்டியும் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஷிகர் தாவன், சுப்மன் கில் ஆகியோர் ஓப்பனிங்கில் இறங்க, தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் என மிடில் ஆர்டரில் வலுசேர்க்க காத்திருக்கின்றனர்.
ரிஷப் பண்டிற்கு தொடர் வாய்ப்புகள் அளிக்கப்பபட்டு வரும் நிலையில், நாளை ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாரை களமிறக்க உள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார், அர்ஷ்தீப் சிங், உம்ரா மாலிக் ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்றால் சஹாலும், இரண்டு பேர் என்ற வியூகம் என்றால் சஹார், குல்தீப் ஆகியோருக்கு அதிக வாய்ப்புள்ளது. பேட்டிங்கை போன்று பந்துவீச்சிற்கான அடிதடியும் அணிக்குள் நிரம்பியுள்ளதால், வீரர்கள் தங்களை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Smiles, friendly banter & the trophy unveil! #TeamIndia | #NZvIND pic.twitter.com/3R2zh0znZ3
— BCCI (@BCCI) November 24, 2022
முதல் போட்டி நாளை நடைபெறும் நிலையில், நவ. 27, 29 ஆகிய தேதிகளில் இரண்டாம், மூன்றாம் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், அவர் இருநாட்டு கேப்டன்களும் தொடரின் கோப்பை அறிமுகப்படுத்தும் வகையில் போட்டோசூட் நடைபெற்றது. இதையடுத்து, இரு கேப்டன்கள் சந்தித்து உரையாடும் வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அப்போது, ஷிகர் தவான், வில்லியம்சன் இருவரும் மாறி ஜோக் சொல்லிக்கொண்டு சிரித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, கோப்பையை இருவரும் அதே சிரிப்போடு அறிமுகப்படுத்தினர்.
கேன் வில்லியம்சன் - ஷிகர் தவான் இருவரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். இதனால், இவர்களுக்கு இடையில் நல்ல பழக்கம் உள்ளது. மேலும், தற்போதைய இந்திய அணியில் உள்ள தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பலரும் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவர்கள். குறிப்பாக, கேன் வில்லியம்சன் தலைமையில் விளையாடிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ