மெல்போர்னில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த அபார வெற்றிக்குப் பிறகு வீரர்கள் புதிய புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் இருக்கிறார்கள். இருப்பினும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடக்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
உமேஷ் யாதவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் தொடரின் அடுத்த போட்டியில் ஆட முடியாமல் போனது. எனினும், இதன் காரணமாக தமிழக வீரரான டி. நடராஜனுக்கு தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடிலெய்டில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி தொடரிலிருந்து விலகினார். அதன் காரணமாக இந்திய அணியின் (Team India) நிர்வாகக் குழு, ஷர்துல் தாகுரை டெஸ்ட் அணியில் சேர்த்தது.
முன்னதாக, ஒரு நாள் சர்வதேச போட்டிகள் முடிந்த பின்னர், ஷர்துல், நடராஜன் (T Natarajan) ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போது மூன்றவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க நடராஜனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
ALSO READ: T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம் in pics
"முகமது ஷமிக்கு மாற்றாக ஷார்துல் தாகூரை தேர்வாளர்கள் சேர்த்தனர். முகமது ஷமியால் முன்கையில் ஏற்பட்ட காயத்தால் ஆட முடியாமல் போனது. நவ்தீப் சைனியும் இருக்கிறார். ஆனால் பந்துவீச்சில் மாறுபாட்டைக் கொண்டுவருவதால் நடராஜன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், நாதன் லியோனுக்காக மிட்செல் ஸ்டார்க் செய்வது போலவே, அவர் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏதுவான அடிச்சுவடுகளை உருவாக்குவார்” என்று அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முகமது சிராஜ் ஏற்கனவே ஷமிக்கு பதிலாக அணியில் இடம் பெற்றுவிட்டார். பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தனது பந்துவீச்சால் அவர் முத்திரை பதித்து விட்டார்.
சிட்னியில் (Sydney) உமேஷுக்கு பதிலாக நவ்தீப் சைனியும் களத்தில் இருக்கும் நிலையில், வேகமான தாக்குதலுக்கு நடராஜன் கொண்டு வரும் மாறுபாடுகள் காரணமாக நடராஜன் பிளேயிங் இலவனில் சேர்க்கப்படலாம் என அனைவராலும் நம்பப்படுகிறது.
ALSO READ: Ind vs Aus 1st T20: இந்தியா வெற்றி, தனது முதல் T20-ல் கலக்கிய தமிழக வீரர் நடராஜன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR