I'm sorry. Rules are rules: தாமதமாக வந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீரர்! சோகக்கதை

மொழிப் பிரச்சனையால் விளையாட்டுக்கு தாமதமாக வந்ததால், தங்கப் பதக்கத்தை வென்றாலும், அது பறிக்கப்பட்ட சோகக்கதை இது, இது கற்பனையல்ல, உண்மையான சம்பவம்…

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 1, 2021, 08:30 PM IST
  • தாமதத்தால் பறிபோன தங்கப் பதக்கம்
  • தாதமதத்திற்கு காரணம் மொழிப் பிரச்சனை
  • மூன்று நிமிட தாமதம் தங்கப் பதக்கத்தை பறித்த சோகக்கதை
I'm sorry. Rules are rules: தாமதமாக வந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீரர்! சோகக்கதை title=

கலந்துக் கொள்ளும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது என்பது எந்தவொரு வீரருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வாழ்நாள் கனவு, நனவாகி, கைக்கு வந்த பதக்கம் கைநழுவிப்போனால், அதைவிட சோகம் வேறு எதுவும் இல்லை.

அரிதிலும் அரிதான நிகழ்வாக இந்த சோகம் நடைபெற்றுள்ளது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் அறிவார்ந்த குறைபாடு உள்ள ஒருவருக்கு நிகழ்ந்த சோகம் என்பது கூடுதல் வருத்தம் தரும் விஷயம்.

போட்டிக்கு தாமதமாக வந்ததால் தங்கப்பதக்கத்தை இழந்தார் இந்த வீரர். டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆண்கள் ஷாட் புட் எஃப் 20 பிரிவின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலேசியாவின் முஹம்மது ஜியாத் சோல்கெஃப்லி, தனது போட்டிக்கு "மூன்று நிமிடங்கள் தாமதமாக" வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் கிரேக் ஸ்பென்ஸ், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் வரத் தவறிய Zolkefli மற்றும் இரண்டு பேர், வாக்குவாதத்திற்கு பிறகு போட்டியிட அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

"அவர்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டது. தாமதமாக வந்ததற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் இருந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் அவர்களை போட்டியிட அனுமதித்தோம்.

ஆனால், பிரகு "போட்டியில் கலந்துக் கொள்ள உரிய நேரத்திற்கு வரத் தவறியதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை" என்று போட்டிக்கு பிறகு நடுவர் தெரிவித்தார். இந்த செய்தியை, பாரா விளையாட்டுகளுக்கான டிராக் அண்ட் ஃபீல்டை நிர்வகிக்கும் உலக பாரா தடகள அமைப்பு (track and field for Para sports) தெரிவித்தது. இது தொடர்பாக, மலேசியா செய்த முறையீடும் நிராகரிக்கப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்தது.

Also Read | Paralympics 2021: உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வெள்ளி, சரத்குமாருக்கு வெண்கலம்

இதன்பிறகு, தங்கப் பதக்கம் வென்றவரின் பதக்கம் திரும்பிப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, உக்ரைனின் மக்ஸிம் கோவல் (Maksym Koval) தங்கப் பதக்கம் பெறுகிறார். முன்னதாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. உக்ரையின் ஒலெக்சாண்டர் யாரோவி தற்போது வெள்ளிப் பதக்கம் பெறுகிறார். கிரேக்கத்தின் எஃப்ஸ்ட்ராடியோஸ் நிகோலைடிஸ் (Efstratios Nikolaidis of Greece) என்ற வீரருக்கு இப்போது வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
 
பாராலிம்பிக்ஸ் கமிட்டியின் முடிவு மலேசியாவில் மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் ஏறப்டுத்தியுள்ளது.  "மிகவும் தவறான" முன்னுதாரணமாக இந்த நிகழ்ச்சி அமையும் என்று கூறப்படுகிறது. இது உக்ரேனியர்களுக்கு சாதகமான செயல்பாடு என்றும் கூறப்படுகிறது.

ஆண்களின் ஷாட் புட் F20 நிகழ்வோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களும் கூட இதை நினைத்து வருத்தப்படுகின்றனர். "I'm sorry. Rules are rules." என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

"மலேசியர் தாமதமாக வந்தது உக்ரேனியர்களின் தவறு அல்ல," என்ற கருத்தும் வைரலாகிறது. 

பொதுவாக போட்டி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே வீரர்கள் வரவேண்டும் என்பது விதிமுறை.  ஆனால் மலேசிய வீரர் சோல்கெஃப்லியும் மற்றவர்களும் மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்தனர். இதில் சோல்கெஃப்லி தங்கப் பதக்கம் வென்று, அதை கோட்டை விட்டதால் தான் இந்த விஷயம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இல்லையென்றால் பெரிய விஷயமாக மாறியிருக்காது.

சரி, வீரர்கள் ஏன் தாமதமாக வந்தார்கள் தெரியுமா? மொழிப் பிரச்சனை தான்!

அறிவிப்பை நாங்கள் கேட்கவில்லை அல்லது அது எங்களுக்கு புரியாத மொழியில் இருந்தது" மலேசிய வீரர் தெரிவித்தார். ஷாட் புட்டில் எஃப் 20 பிரிவு என்பது அறிவுசார் குறைபாடுகள் (intellectual disabilities) உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனிமேல், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் மட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துக் கொள்ளும் வீரர்கள் மலேசியாவின் முஹம்மது ஜியாத் சோல்கெஃப்லியை நினைவில் வைத்துக் கொள்வார்கள். வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பதிவாக வேண்டிய வீரர், தாமதமாக வந்ததால் பதக்கத்தை இழந்தவர் என்பதற்காக நினைவு கொள்ளப்படுவார்!!!

READ ALSO | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News