Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 தொடங்கி, மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தவில்லை. 2016ம் ஆண்டே இனி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறாது என்று அறிவித்தது. டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் தனியாக வேறு எந்த தொடரும் வேண்டாம் என்று ஐசிசி முடிவெடுத்து இதனை ரத்து செய்தது. ஆனாலும் கடந்த 2021ம் ஆண்டு ஐசிசி அவர்களது முடிவை மாற்றியமைத்து 2025ம் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்று அறிவித்தது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அங்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் பிரச்சனை காரணமாக இந்தியா அங்கு செல்லாது என்று கூறப்படுகிறது. இரண்டு அணிகளும் இரு தரப்பு தொடர்களிலும் விளையாடுவது இல்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற 2023 உலக கோப்பைக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து இருந்தது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக சமீபத்தில் ஐசிசி ஒரு கூட்டத்தை நடத்தி உள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு மட்டும் வேறு இடங்களில் நடத்தினால் எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு வருகிறது.
அதன்படி, பாகிஸ்தானை தவிர மற்ற இடங்களில் போட்டிகளை நடத்தினால் சுமார் சுமார் 65 மில்லியன் டாலர் செலவாகும் என்று கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வேலைகளை செய்து வருகிறது. இதற்கான ஒப்பந்தங்கள், வரவுசெலவுத் திட்டம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு வெளியே சில போட்டிகளை நடத்தினால் ஏற்படும் செலவு பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐசிசி பாகிஸ்தான் மைதானங்கள் தொடர்பான ஆய்வை நடத்தியது. சில மைதானங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" ஐசிசி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள உத்ததேச சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அட்டவணையின்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் லாகூரில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடும் போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெற உள்ளன. மார்ச் 1ம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்தையும், பிப்ரவரி 23 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்தியா எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 உத்ததேச அட்டவணை
போட்டி 1: NZ v PAK - பிப்ரவரி 19 (புதன்கிழமை)
போட்டி 2: BAN v IND - பிப்ரவரி 20 (வியாழன்)
போட்டி 3: AFG v SA - பிப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை)
போட்டி 4: AUS v ENG - பிப்ரவரி 22 (சனிக்கிழமை)
போட்டி 5: NZ v IND - பிப்ரவரி 23 (ஞாயிற்றுக்கிழமை)
போட்டி 6: PAK v BAN - பிப்ரவரி 24 (திங்கட்கிழமை)
போட்டி 7: AFG v ENG - பிப்ரவரி 25 (செவ்வாய்க்கிழமை)
போட்டி 8: AUS v SA - பிப்ரவரி 26 (புதன்கிழமை)
போட்டி 9: BAN v NZ - பிப்ரவரி 27 (வியாழன்)
போட்டி 10: AFG v AUS - பிப்ரவரி 28 (வெள்ளிக்கிழமை)
போட்டி 11: PAK v IND - மார்ச் 1 (சனிக்கிழமை)
போட்டி 12: SA v ENG - மார்ச் 2 (ஞாயிறு)
அரையிறுதி 1: A1 v B2 - மார்ச் 5 (புதன்கிழமை)
அரையிறுதி 2: B1 v A2 - மார்ச் 6 (வியாழன்)
இறுதி போட்டி: மார்ச் 9 (ஞாயிற்றுக்கிழமை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ