ஐபிஎல் 2021-ன் போது டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை அணுகியதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆனால் சிறிது யோசித்த பிறகு வேலையின் தன்மை மற்றும் தனது பணி நேரத்தை கணக்கில் கொண்டு அதனை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். உலக கோப்பைக்கு டி20 தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் புதிய தொடக்கமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் புதிய முழுநேர T20I கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியுடன் டிராவிட் தலைமையில் இந்தியா தனது பயணத்தைத் தொடங்கியது இந்தியா.
ALSO READ இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021-ன் போது டீம் இந்தியா தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை அணுகியதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிது யோசித்த பிறகு வேலையின் தன்மை மற்றும் தனது பணி நேரத்தை கணக்கில் கொண்டு அதனை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ஐபிஎல்-ல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி பற்றி சிலருடன் நான் பேசினேன். நான் பேசிய நபர்கள் அதைச் செயல்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க மிகவும் தயங்கினார்கள். நான் முதலில் என்னால் முடியும் என்றே கூறினேன். ஆனால், அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் என்னால் பயிற்சியாளராக இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன்.
ராகுல் டிராவிட்ற்கு குடும்பம் மற்றும் சிறிய குழந்தைகள் இருந்த போதிலும் அவர் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். உண்மையில், டிராவிட் அதை ஏற்றுக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய 19வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளராக அவர் இருந்த போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். நான் விசாரித்த வரையில் இந்திய அணிக்கு ட்ராவிட் சரியான தேர்வாக இருப்பார் என்றே பலர் கூறினர். அடுத்த ஆண்டும் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருப்பீர்களா என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டும் கண்டிப்பாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருப்பேன். கடந்த நான்கு ஆண்டுகளாக டெல்லி அணியுடன் இருப்பதை மிகவும் விரும்புகிறேன். நாங்கள் ஒரு அணியாக மகிழ்ச்சியாக உள்ளோம், மேலும் சில இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான் போன்றோர் சிறந்த ஐபிஎல் வீரர்களாக மாறியுள்ளனர். மேலும் அவர்களில் சிலர் சிறந்த சர்வதேச வீரர்களாகவும் மாறியுள்ளனர்.
அடுத்த ஆண்டு மெகா ஏலம் குறித்து கேட்கப்பட்ட போது, தற்போதைய அணியில் இருந்து பெரும்பான்மையான வீரர்களை தக்கவைக்க அணி நிர்வாகம் முயற்சிக்க உள்ளது. ஆனால் அது ஒரு பெரிய சவாலாக இருக்கும். நான்கு வீரர்களை மட்டுமே வைத்திருக்க முடியும், கடந்த ஆண்டு அணியில் சுமார் 24 அல்லது 25 வீரர்கள் இருந்தனர். அவர்களில் அணிவரையும் முடிந்தவரை மீண்டும் அணியில் எடுக்க முயற்சிப்போம். இரண்டு புதிய அணிகள் ஸ்ரேயாஸ் ஐயர்மற்றும் ரிஷப் பந்த் உடன் பேசி வருகின்றனர். முடிவு எடுக்கவேண்டியது அவர்களின் கையில் உள்ளது என்று தெரிவித்தார். டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2021-ல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும் 2020 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தொடர்ந்து மூன்றாவது சீசனுக்கான பிளே-ஆஃப்களுக்குச் தகுதி பெற்றது.
ALSO READ 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR