உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது! 

Last Updated : Jun 26, 2019, 08:07 AM IST
உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா! title=

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது! 

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து அஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். 53 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 7 விக்கெட்டுகளை இழந்து, 285 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 100 ரன்களும் எடுத்தார்.

இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய வின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரூட் மற்றும் மோர்கன் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி தொடர் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனையடுத்து வந்த ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்நிலையில், அந்த அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 89 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் ஜேசன் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஸ்டொய்னிஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரிலும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

Trending News