சென்னை அணியின் ஐபிஎல் 2022 பிளே ஆப் கனவு தற்போது பறி போகி உள்ளது. முக்கியமான மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை படு தோல்வி அடைந்தது. இருப்பினும், தோனியின் சிறப்பான பேட்டிங் அணியை சரிவில் இருந்து மீட்டு குறிப்பிடத்தக்க ஸ்கோரை எட்ட செய்தது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜடேஜா, காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகி இருந்தார். மேலும், தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியது மேலும் ஒரு அடியாக இருந்தது.
மேலும் படிக்க | பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி
கடந்த சில ஐபிஎல் போட்டிகளில் தோனியின் ஓய்வு குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. வியாழன் அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய தோனி, "எங்களிடம் சில நேர்மறையான அம்சங்கள் உள்ளன, அவை அடுத்த சீசனில் எடுக்கப்படும். ஆனால் முக்கியமானது என்னவென்றால், எந்த இடைவெளிகள் இருந்தாலும், கசிவுகள் ஏற்படாதவாறு அந்த இடைவெளிகளை நிரப்ப முயற்சிக்க வேண்டும். சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் அவர்களின் பவுலிங் சென்னை அணிக்கு பலம் சேர்த்து. வேகப்பந்து வீச்சாளர்கள், இருவரும் நன்றாக பந்துவீசுவது ஒரு பெரிய பாசிட்டிவ். அடுத்த சீசனில் இன்னும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வருவார்கள். அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தொடர்வேன், ஆனால் பேட்ஸ்மேனாக என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.
கடந்த ஆண்டு தோனி தனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். "இந்தியாவில் நான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில்தான். என்னுடைய கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். அது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடத்தில் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது" என்று அவர் கூறினார். இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிகள் சென்னையில் நடைபெற்றால் தோனி பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு சிஎஸ்கே குறிவைக்கும் மூன்று வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR