சோகம்! இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம்

Last Updated : Jul 20, 2016, 02:14 PM IST
சோகம்! இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம் title=

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ஷாஹித் குர்கானில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

முகமது ஷாகித் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஏப்ரல் 14, 1960ல் பிறந்தார். தனது 19வது வயதில், பிரான்சு அணிக்கு எதிரான, ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக முதன் முதலில் விளையாடினார்.

இதன் விளைவாக கடந்த 1980ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனது திறமையை நிருபித்தார். தொடர்ந்து நடந்த எல்லா போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இந்திய அணி தங்கம் வெல்ல கைகொடுத்தார். இந்திய ஹாக்கி அணியை கடந்த 1985-86-ல் நடந்த போட்டிகளில் வழி நடத்தும் வாய்ப்பை பெற்றார். 

இவருக்கு 1981-ல் அர்ஜூனா விருதும், 1986-ல் பதம்ஸ்ரீ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஜூன் 29-ல், கடுமையான வயிற்று வலி காரணமாக பனாரஸ் பல்கலைகழகத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, டெல்லியின் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மூன்று வாரங்களுக்கு பின், கல்லீரல், கிட்னி கோளாறு காரணமாக இன்று தனது 56-வது வயதில் ஷாகித் காலமானார்.

 

 

 

Trending News