ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26 முதல் தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டும் நடைபெறுகிறது. தற்போது ஐபிஎல் 2022-ல் 20 போட்டிகள் வரை முடிவடைந்த நிலையில், ஐபிஎல்-ல் மிகப் பெரிய அணியாக கருதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
மேலும் படிக்க | இன்றைக்கு மட்டும் விராட் 53 ரன்கள் எடுத்தால்..! இப்படி ஒரு சாதனையா?
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இரு அணிகளும் முக்கிய வீரர்களை எடுக்காமல் விட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மும்பை அணியில் இருந்த போல்ட், டி காக், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் தற்போது வேறு அணியில் விளையாடி வருகின்றனர். சிஎஸ்கே அணியில் இருந்த ஷர்துல் தாகூர், ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற வீரர்கள் வேறு அணிகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிஎஸ்கே அணி வரலாற்றிலேயே ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவர் தீபக் சாஹர். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவரை அதிக விலைக்கு சிஎஸ்கே எடுத்தது.
இருப்பினும் காயம் காரணமாக தீபக் சாஹர் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் ஐபிஎல் 2022-ன் முழு போட்டியில் இருந்தும் தற்போது தீபக் சாஹர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி, பவுலிங்கில் சொதப்பி வருகிறது. தற்போது சாஹர் விலகல், மேலும் ஒரு அடியாக பார்க்கப்படுகிறது. இன்று சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன, சென்னையின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார்.
மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR