IND vs SL Highlights: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) 33ஆவது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 357 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுப்மான் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், சமீரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா முதல் ஓவரிலேயே பதும் நிசங்கா டக்அவுட்டானார். தொடர்ந்து, இரண்டாவது ஓவரில் சிராஜ் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா ஆகியோர் டக்அவுட்டானார். சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் குசால் மெண்டிஸ் 1 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, 9ஆவது ஓவரில் ஷமி பந்துவீச வந்தார்.
அந்த ஓவரில் அசலங்கா, ஹேமந்தா ஆகியோர் அவுட்டாக, 11ஆவது ஓவரில் சமீராவை ஷமி விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, 13ஆவது ஓவரில் மேத்யூஸையும், 18ஆவது ஓவரில் ரஜிதாவையும் ஷமி அவுட்டாக்கி தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டை ஹாலை பதிவு செய்தார். மேலும், உலகக் கோப்பை தொடரில் இது ஷமியின் 3ஆவது 5 விக்கெட் ஹால்.
#TeamIndia becomes the first team to qualify for the #CWC23 semi-finals #MenInBlue | #INDvSL pic.twitter.com/wUMk1wxSGX
— BCCI (@BCCI) November 2, 2023
அதுமட்டுமின்றி, இந்திய அணி சார்பில் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் ஷமி படைத்தார். கடைசி விக்கெட்டாக மதுஷங்காவை ஜடேஜா விக்கெட் எடுத்தார். அதன்மூலம், 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மேலும், இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளது. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகளுடன் இந்தியாவுக்கு போட்டி உள்ளது. இலங்கை அணி அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறியது. மேலும், இந்திய அணி முதலிடத்தில் முன்னேறியது.
மேலும் படிக்க | ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ