CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்... சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே...!

CSK vs SRH Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.   

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2024, 12:13 AM IST
  • துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • மிட்செல் 5 கேட்ச்களை கைப்பற்றினார்.
  • ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களை அதிகபட்சமாக அடித்தார்.
CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்... சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே...! title=

CSK vs SRH Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 45வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், டேரில் மிட்செல் 52 ரன்களையும், தூபே 39 ரன்களையும் அடித்தனர். தோனி கடைசி ஓவரில் 2 பந்துகளை அடித்து 5 ரன்களை அடித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், உனத்கட் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

தேஷ்பாண்டே மிரட்டல்

213 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழக்கமாக அதிரடி தொடக்கம் கிடைக்கவில்லை. தீபக் சஹார் முதல் ஓவரில் 7 ரன்களை கொடுத்தார். இரண்டாவது ஓவரில் தேஷ்பாண்டே வீச 2 சிக்ஸர்கள் பறந்தது. ஆனால், ஹெட் டீப் பாய்ண்ட் திசையில் கேட்ச் கொடுக்க மிட்செல் பிடித்தார். இதற்கு அடுத்த பந்திலேயே இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் டக் அவுட்டானார். தொடர்ந்து தேஷ்பாண்டே வீசிய 4வது ஓவரில் அபிஷேக் சர்மாவும் அதே டீப் பாய்ண்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

மேலும் படிக்க | ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன 'நச்' பதில்

டேரில் மிட்செல் 5 கேட்ச்கள்

டிராவிஸ் ஹெட் 13, அபிஷேக் சர்மா 15 ரன்களை எடுத்து வெளியேறினர். மார்க்ரம் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். இதன்பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. நிதிஷ் ரெட்டி 15 ரன்களிலும், மார்க்ரம் 32 ரன்களிலும், கிளாசென் 20 ரன்களிலும், அப்துல் சமத் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமத், ஜெயதேவ் உனத் கட் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து எஸ்ஆர்ஹெச் ஆல்-அவுட்டானது. தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார். டேரில் மிட்செல் இதில் 5 கேட்ச்களை கைப்பற்றினார். 

புள்ளிப்பட்டியல் நிலவரம்

புள்ளிப்பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் அடைந்து 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அதே 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பஞ்சாப், மும்பை, பெங்களூரு அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 8, 9, 10ஆவது இடங்களில் உள்ளது. லக்னோ, டெல்லி அணிகள் 10 புள்ளிகளுடன் முறையே 5, 6வது இடத்திலும், குஜராத் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News