IND vs SA 3rd T20: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 0-1 என கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. தொடரின் முடிவை இறுதிசெய்யும் போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா இன்றைய போட்டியை வென்றால் தொடரையும் சேர்த்தும் கைப்பற்றும். ஆனால், இந்தியா இன்றைய போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யவே இயலும்.
முதல் டி20 போட்டி மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 180 ரன்கள் எடுத்த போதிலும் மழை குறுக்கீடு காரணமாக இலக்கும் 152 ரன்களாக குறைக்கப்பட்டு, ஓவர்கள் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர்களால் தென்னாப்பிரிக்காவை கட்டுப்படுத்தவே இயலவில்லை. எனவே, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனென்றால் முன்னரே சொன்னாதுபோல் முதல் போட்டி முழுமையாகவும், இரண்டாவது போட்டியில் சிறிய அளவிலும் மழை பெய்ததால் போட்டியின் முடிவுகள் மாற்றமடைந்தன எனலாம். அந்த வகையில், மூன்றாவது போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் அணிகளில் அதிகம் மதிப்பு வாய்ந்த அணி இதுதான்... ஆனால் சிஎஸ்கே இல்லை!
இருப்பினும், ரசிகர்களின் மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது, டர்பன் மற்றும் க்கெபர்ஹாவில் இருந்தது போல் ஜோகன்னஸ்பர்க்கில் மழை பெய்ய வாய்ப்பில்லை. போட்டி முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லாமல் பெரும்பாலும் வெயிலாக இருக்கும். இதனால், 40 ஓவர்கள் கொண்ட முழுமையான போட்டி இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. வெப்பநிலை 23 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், இது அசல் வெப்பநிலையை விட ஒரு டிகிரி அல்லது இரண்டு குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடரின் முடிவு இன்று நிச்சயம் எட்டப்படும் என நம்பலாம்.
பிளேயிங் லெவன் கணிப்பு
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்
தென்னாப்பிரிக்க அணி: ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி.
மேலும் படிக்க | Rinku Singh Apologize: சிக்சர் அடித்ததற்காக மனிப்பு கேட்ட ரிங்கு சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ