இனி இவர்களுக்கு இடம் இல்லை! சம்பள பட்டியலில் இருந்து தூக்கிய பிசிசிஐ!

பிசிசிஐ ரவீந்திர ஜடேஜாவுக்கு பிசிசிஐ கிரேடு ஏ+ ஒப்பந்தம் வழங்கியுள்ளது, கே.எல் ராகுல் கிரேடு பி-க்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் கடந்த ஆண்டு கிரேடு ஏ பிரிவில் இருந்தனர்.     

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 06:59 AM IST
  • 26 வீரர்களில் ஐந்து பேர் வருடாந்த ஒப்பந்தத்தில் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
  • இருவர் ஒப்பந்தத்தை தக்கவைத்துக்கொள்ளும் போது தரமிறக்கப்பட்டுள்ளனர்.
  • ஏழு வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை இழந்துள்ளனர்.
இனி இவர்களுக்கு இடம் இல்லை! சம்பள பட்டியலில் இருந்து தூக்கிய பிசிசிஐ! title=

அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 2022-23 சீசனுக்கான ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஒப்பந்தப் பட்டியல் A+, A, B மற்றும் C என நான்கு கிரேடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிரேடு A +-ல் விளையாடுபவர்கள் INR 7 கோடி, கிரேடு A INR 5 கோடி, கிரேடு B க்கு INR 3 கோடி மற்றும் கிரேடு Cக்கு INR 1 கோடி ஆகும்.  அந்த 26 வீரர்களில் ஐந்து பேர் வருடாந்த ஒப்பந்தத்தில் பதவி உயர்வு பெற்றுள்ளனர், இருவர் ஒப்பந்தத்தை தக்கவைத்துக்கொள்ளும் போது தரமிறக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் முந்தைய சுழற்சியில் ஒப்பந்தம் செய்யப்படாதவர்கள், தற்போதைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், ஏழு வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை இழந்துள்ளனர்.

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கேவின் துருப்புச் சீட்டு இவர் தான்..! மற்ற அணிகளுக்கு கிலி காட்டப்போகிறார்

மிகப்பெரிய லாபம் பெற்ற வீரர்கள்:

ரவீந்திர ஜடேஜா: கிரேடு A (INR 5 கோடி) இலிருந்து A+ ஆக (INR 7 கோடி) உயர்த்தப்பட்டார்
ஹர்திக் பாண்டியா: கிரேடு C (INR 1 கோடி) இலிருந்து A (INR 5 கோடி) ஆக உயர்த்தப்பட்டார்
அக்சர் படேல்: B (INR 3 கோடி) இலிருந்து A (INR 5 கோடி) ஆக உயர்த்தப்பட்டார்
சூர்யகுமார் யாதவ்: கிரேடு C (INR 1 கோடி) இலிருந்து B (INR 3 கோடி) ஆக உயர்த்தப்பட்டார்
சுப்மன் கில்: கிரேடு C (INR 1 கோடி) இலிருந்து B (INR 3 கோடி) ஆக உயர்த்தப்பட்டார்

மிகப்பெரிய இழப்பை சந்தித்த வீரர்கள்:

கே.எல். ராகுல்: கிரேடு A (INR 5 கோடி) இலிருந்து B (INR 3 கோடி) க்கு தரம் தாழ்த்தப்பட்டார்
ஷர்துல் தாக்கூர்: கிரேடு B (INR 3 கோடி) இலிருந்து C (INR 1 கோடி) க்கு தரம் தாழ்த்தப்பட்டார்

புதிதாக இணைந்த வீரர்கள்:

இஷான் கிஷன், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத் ஆகியோர் கிரேடு சியில் (INR 1 கோடி) சேர்க்கப்பட்டுள்ளனர்.

வருடாந்திர ஒப்பந்தங்களை இழந்த வீரர்கள்:

இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்களான அஜிங்க்யா ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் முந்தைய பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு பி பிரிவில் (INR 5 கோடி) ஒரு பகுதியாக இருந்தனர், ஆனால் 2022-23 சுழற்சிக்கான புதிய ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கிடையில், கிரேடு சி (INR 1 கோடி) பிரிவில் இருந்த புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | இதுவும் போச்சா? பதவி, பணம் என இரண்டையும் இழந்து நிற்கும் கேஎல் ராகுல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News