பிரபல கிரிக்கெட் வீரருக்கு காலில் எலும்பு முறிவு! இனி விளையாடுவது சந்தேகம்?

பார்ட்டியில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு தவறி விழுந்ததில் எலும்பு முடிவு ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2022, 01:29 PM IST
  • கிளென் மேக்ஸ்வெல்க்கு காலில் எலும்பு முறிவு.
  • அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது.
  • சில முக்கிய தொடர்களை இழக்க நேரிடும்.
பிரபல கிரிக்கெட் வீரருக்கு காலில் எலும்பு முறிவு! இனி விளையாடுவது சந்தேகம்? title=

சனிக்கிழமையன்று மெல்போர்னில் நடந்த ஒரு பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக கால் உடைந்ததால், கிளென் மேக்ஸ்வெல் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.  மேக்ஸ்வெல்லுக்கு ஃபைபுலா எலும்பு முறிவு ஏற்பட்டு சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறந்தநாளைக் கொண்டாடிய நபருடன் ஓடும்போது தவறி விழுந்ததில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  இதனால் மேக்ஸ்வெல் வியாழன் அன்று தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மெல்போர்ன் ஸ்டார்ஸுடனான முழு BBL ஐயும் இழக்க நேரிடும்.  

மேலும் படிக்க | ஐபிஎல் குறித்து கேள்வி... ஷாக் ஆன பாகிஸ்தான் கேப்டன் - பதில் என்ன தெரியுமா?

பிப்ரவரியில் தொடங்கும் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் மேக்ஸ்வெல்லின் அப்போதைய உடல்நிலை கருத்தில் கொண்டு அணியில் இடம் பெறுவாரா என்பது முடிவு செய்யப்படும்.  தேசிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், "கிளென் மேக்ஸ்வெல் தற்போது நன்றாக உள்ளார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மற்றும் மேக்ஸ்வெல் தனது கடைசி சில ஆட்டங்களில் நன்றாகவே விளையாடினார். மேக்ஸ்வெல் எங்கள் ஆஸ்திரேலியா அணியின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறார், மேலும் அவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

 

ஸ்டார்ஸ் பொது மேலாளர் பிளேர் க்ரூச் பேசும்பொழுது, "மெல்போர்ன் ஸ்டார்ஸில் மேக்ஸ்வெல் ஒரு பெரிய அங்கமாக இருக்கிறார், மேலும் அவர் குணமடைய வாழ்த்துவோம்,  முழு உடற்தகுதியுடன், விரைவில் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்று கூறினார்.  இங்கிலாந்துக்கு எதிரான அணியில் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக சீன் அபாட் இடம்பிடிப்பார்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, கோல்ஃப் விளையாடியதில் தவறி விழுந்ததால், கணுக்கால் கடுமையாக உடைந்து, இதனால் இந்த ஆண்டு முழுவதும் அவர் கிரிக்கெட் ஆடவில்லை. மேலும், ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக கோல்ஃப் விளையாடியதில் ஏற்பட்ட காயம் காரணமாக பொடியை தவறவிட்டார்.

மேலும் படிக்க  | பாகிஸ்தான் அணி பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறது: உலக கோப்பை ஆசைக்கு வேட்டு வைத்த கும்பிளே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News