வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): சிம்மம் முதல் விருச்சிகம் வரை

Weekly Horoscope: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில்  சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 01:23 PM IST
  • ஆட்டோமொபைல் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • கடந்த காலத்தில் வாட்டிய நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
  • உயர் அதிகாரிகள் கண்காணிக்க போவதால் எச்சரிக்கையுடன் வேலையைச் செய்யுங்கள்.
வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): சிம்மம் முதல் விருச்சிகம் வரை title=

Weekly Horoscope: ஜூன் 6-ம் தேதி துவங்கும் இந்த வாரத்தில்  சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 

சிம்மம் 

சிம்மம் ராசிக்காரர்கள் கல்வி நிறுவனத்தில் உயர் பதவியைப் பெற குழு மற்றும் முதலாளியுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். இந்த வாரம் ஆட்டோமொபைல் வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இது அனைத்து டீலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும்.

இளைஞர்கள் இந்த வாரம் கல்வி அறிவைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அறிவைப் பெருக்கினால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.  குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைவரும் இணைந்து ஒன்றாக இருப்பது மிகவும் அவசியம். எல்லா விதமான நன்மையும் அதில்தான் அடங்கி இருக்கிறது. கடந்த காலத்தில் வாட்டிய நோய்கள் குறித்து  எச்சரிக்கையாக இருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் நோய் மீண்டும் ஏற்படலாம்.  அசைவ உணவைக் கைவிடுங்கள். ஆன்மீகவாதிகளுடன் சந்திப்பு இருக்கு.  இது தகுதியான அமைப்பை அடைய வழிவகுக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முயற்சிக்கவும்.

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): மேஷம் முதல் கடகம் வரை

கன்னி 

 இந்த ராசிக்காரர்களின் வேலையை உயர் அதிகாரிகள் கண்காணிக்க போவதால் எச்சரிக்கையுடன் வேலையைச் செய்யுங்கள். இம்முறை தொலைத்தொடர்பு வியாபாரத்தில் சற்று ஏமாற்றம் ஏற்படும். ஆனால் பிரச்சனை தீவிர்மானதாக இருக்காது. பொறுமையாக இருங்கள். இந்த ராசி இளைஞர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். அதை நேர்மறையாக பயன்படுத்தி இலக்கை அடையுங்கள். 

குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கால்கள் மற்றும் முதுகில் வலி பிரச்சனை இருக்கலாம். முடிந்தால், இடுப்பில் சிறிது ஜெல் தடவி மசாஜ் செய்து ஓய்வெடுக்கவும். தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், வெளியாட்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, உங்களுக்கு உதவும் குணத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை

துலாம் 

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் அதிகார பூர்வமான குழுவை வலுப்படுத்த வேண்டும். இலக்கை அடைய குழுவினரி உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். வியாபார விஷயங்களில் போட்டி அதிகமாக காணப்படும். அதே நேரத்தில், வாரத்தின் நடுப்பகுதியில் கடன் பெறலாம். இளைஞர்கள் தங்கள் தந்தையின் நிறுவனத்தில் சேரக் கூடும். இதனால்,  ஒருபுறம் தந்தை மகிழ்ச்சியாக இருப்பார். அங்கே உங்களுக்கு அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். 

மறுபுறம், உங்கள் மனைவி மற்றும் நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள், இதன் காரணமாக உங்கள் தடைபட்ட வேலைகள் எளிதாக முடிவடையும். குழந்தைகள் மீது கவனம் தேவை, இந்த வாரம் அவர்கள் விழுந்து பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளது, எனவே அவர்களை தனியாக விளையாட விடாதீர்கள். அதிதி தேவோ பவ என்பதால் விருந்தினர்களின்  வருகை இருக்கும், விருந்தினர்களை திறந்த மனதுடன் வரவேற்கவும்.

விருச்சிகம் 

 இந்த ராசிக்காரர்கள் பல அலுவலக வேலைகளில் பங்கேற்பார்கள். இதனால் அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கலாம். வணிக கூட்டாளியின் விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்வது பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். இளைஞர்களின் வேலை, படிப்பு தொடர்பான வெளிநாடுகளுக்குச் சென்று பாஸ்போர்ட் போன்றவற்றை செய்து வைத்துக்கொள்ளும் திட்டம் இருக்கும். 

குடும்பத்தில் உள்ள அனைவரையும் மதித்து நடந்து கொள்ளுங்கள். தந்தைக்கு பரிசுகளை வழங்குங்கள் அன்பளிப்புகளை வழங்குவதன் மூலம் தந்தை மகிழ்ச்சியடைந்து ஆசீர்வதிப்பார். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் வரலாம். நீங்கள் சற்று மன உளைச்சலுக்கு ஆளாகலாம். மூத்தவர்களின் வழிகாட்டுதல் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும், எனவே அவர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News