Weekly Horoscope (Oct 10 - 16): இந்த வாரம் மிக கவனமாக இருக்க வேண்டிய 'சில' ராசிகள்!

வார ராசிபலன்:  அக்டோபர் இரண்டாவது வாரத்தில்,  குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திக்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2022, 05:31 PM IST
  • திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம்.
  • பதற்றம் மற்றும் சர்ச்சை சூழ்நிலையைத் தவிர்க்கவும்.
  • உடல் நலனில் அக்கறை தேவை.
Weekly Horoscope (Oct 10 - 16): இந்த வாரம் மிக கவனமாக இருக்க வேண்டிய 'சில' ராசிகள்! title=

வார ராசிபலன் 2022:  அக்டோபர் இரண்டாவது வாரத்தில்,  குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திக்கலாம் என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண விஷயத்தில் சில சவால்களை கொண்டு வரும் வாரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் அதிகமாக செலவுகள் செய்ய நேரிடும் என்பதால், உங்கள் பட்ஜெட்டை அது பாதிக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். திடீரென்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில், பொறுமை கடைபிடிக்கப்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைத்தால், பல்ன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம் - இந்த வாரம் நிதி நிலைமையில் சில பாதிப்புகள் வரலாம் என்பதால், செலவுகளை செய்யும் போது யோசித்து செயல்படுங்கள். பொறுமையாக இருங்கள். நிலைமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எனினும் உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் இருக்கும். மாமியார் தரப்பிலும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகள் கூடும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படும். எனினும் காதல் உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். 

மிதுனம் - அக்டோபர் இரண்டாவது வராம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். பதற்றம் மற்றும் சர்ச்சை சூழ்நிலையைத் தவிர்க்கவும். உங்கள் மனைவியுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். தவறான கையாளுவது உங்களை சிக்கலில் தள்ளும். முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

கடகம் -இந்த வாரம் உங்கள் உடல்நிலை குறித்து கவனமாக இருக்க வேண்டும். உடல் நல பாதிப்பு இருந்தால், மருத்துவரிடம் செல்லவும்.  யோகா செய்வதும் உடல் நலத்தை மேம்படுத்தும். எனவே, உடல்நலம் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். இந்த வாரம் தாயாரைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். புதிய கார் போன்றவை வாங்கும் கனவு நிறைவேறும். நீங்கள் ஆன்மீக பயணமும் செல்லலாம். 

சிம்மம் - இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய வேலை தேடிக்கொண்டிருந்தால் நல்ல வாய்ப்புகள் வரும். இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் காதல் உறவுகளுக்கும் நல்லது. ஆனால் உடல் நலனில் அக்கறை தேவை. பழைய காயம் அல்லது நோய் உங்களை தொந்தரவு செய்யலாம். முதலீடு தொடர்பாக சில உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கலாம். நீங்கள் நீண்ட காலமாக, நீங்கள்  மேற்கொள்ள நினைத்த, எதிர்காலத்தைப் பற்றிய சில திட்டங்களின் வேலையை விரைவுபடுத்தலாம்.

கன்னி - அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16 வரையிலான காலத்தில் உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் வேலை பாதிக்கப்படாது. புதிய செலவுகளைத் தவிர்க்கவும். எனினும் சில விஷயங்களில் மகிழ்ச்சியைத் தரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் விலகும். குழந்தைகளின் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். திருமணத்திற்கு நல்ல உறவை எதிர்பார்த்து இருப்பவர்கள் இந்த வாரம் அவர்களின் தேடல் முடியும். திருமணத்தில் இருந்து வந்த தடைகளும் நீங்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News