Weekly Horoscope: வரும் வாரம் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்! யார் யார் தெரியுமா?

Weekly Horoscope 18th December to 24th December 2023: கிரகப்பலன்களின்படி, ஒரு சில ராசிகளுக்கு அடுத்த வாரம் அதிர்ஷ்ட மழை அடிக்கும். அந்த ராசிகள் யார் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 17, 2023, 08:14 PM IST
  • இந்த வாரம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.
  • ஒரு சிலருக்கு உடல் நலனில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • இந்த வார ராசிபலன் இதோ!
Weekly Horoscope: வரும் வாரம் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்! யார் யார் தெரியுமா?  title=

அனைவரின் ராசிகளின் கிரகப்பலன்களிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதன்படி, வரும் வாரம் உங்களது ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 

1.மேஷம்:

நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு விஷயம், இந்த வாரத்தில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இந்த வாரம், உங்களை சுற்றி இருப்பவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அது, உங்களுக்கு சாதகமாகவே அமையும். ஒரு சில நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எந்த முடிவை எடுப்பதற்கு முன்பும் நிதானித்து செயல்படவும். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வரும் வாரத்தில், உங்களுக்கு பல நாட்களாக வந்து சேராமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கும் பணம், கைக்கு வரலாம். 

2.ரிஷபம்:

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த வாரம் நேரம் செலவழிக்க நினைப்பீர்கள். உடன் வேலைப்பார்ப்பவர்களுடன் எதிர்ப்பாராத விவாதங்கள் எழலாம். ஆனால், அவை எளிதில் தீர்க்க கூடியவையாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்களை இந்த வாரம் ஆச்சரியப்படுத்த வாய்ப்புகள் அஹ்டிகம். பண ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படும், அவையும் சீக்கிரமாகவே சரியாகிவிடும். இந்த வாரம், உங்களின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

3.மிதுனம்:

இந்த வாரம், நீங்கள் சிறிது ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நிம்மதியாக உணர, நீங்கள் சில பொழுதுபோக்குகள் மற்றும் கலை நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உங்கள் தனித்துவமான பாணியை பலர் பாராட்ட வாய்ப்பிருக்கிறது. உங்கள் அன்பிற்குரியவருடன் இணக்கம் உருவாகலாம். செலவு செய்கையில் கவனம் தேவை. எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள். உங்களது உடல் நலனில் இந்த வாரம் அக்கறை செலுத்துவீர்கள். 

4.கடகம்:

இந்த வாரம் உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும். உங்கள் சுய-கவனிப்பு நடைமுறைகளை நீங்கள் கவனித்துக் கொள்ள வாயிப்பிருக்கிறது. புதிய ஆடை, புதிய பொருட்கள் வாங்க முனைப்பு காட்டுவீர்கள். இந்த வாரம் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். உங்கள் கோபத்தை இந்த வாரம் கொஞ்சம் அடக்கியாளவும். நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து இந்த வாரம் லாபம் வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் உணர்ச்சிகளையும் உடலையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். 

5.சிம்மம்:

இந்த வாரம், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மும்முரமாக செய்து கொடுக்கும் முனைப்பில் இருப்பீர்கள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து அலுவலக வாழ்க்கையை பிரித்து பார்ப்பது நல்லது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். இந்த வாரம் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், இது உங்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க உதவும் நிதியை கொடுக்கலாம், கடனையும் தீர்க்கலாம். 

மேலும் படிக்க | மார்கழி மாதம் வந்தாச்சு! கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

6.கன்னி:

இந்த வாரம், பல விஷயங்களை கற்றுக்கொள்ள முனைவீர்கள். சில இடங்களுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் வேலைகளை முடிக்க கொஞ்சம் நேரமெடுக்கலாம். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் பலருக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெற வாய்ப்புண்டு. சிலர், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சந்திப்பர். 

7.துலாம்:

இந்த வாரம், உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்வீர்கள். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள், இந்த வாரம் தங்குதடையின்றி நடைபெறும். ஆன்மிக பயணங்கள் வாய்ப்புண்டு. உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுகையில் வார்த்தைகளில் கவனம் தேவை. சண்டை ஏற்படும் தருணங்களில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரம் சில தேவையற்ற உடல் உபாதைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். 

8.விருச்சிகம்:

இந்த வாரம், நீங்கள் சிறந்த நிதி மேலான்மையை பேணுவீர்கள். உங்களது நெருங்கிய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உங்களை நீங்களே குறைத்து மதிப்புட்டுக்கொள்ள வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிக்க எண்ணுவீர்கள், அதற்கான வாய்ப்புகளும் அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிலருக்கு லாபங்கள் ஏற்படும். ஆன்மிக ரீதியான விஷயங்களை சிலர் நாடுவர். 

9.தனுசு:

இந்த வாரம், ஆரோக்கியமான வாழ்க்கையை பேணுவீர்கள். அலுவலகத்தில் யாருடனும் சண்டையிடுவதை தவிர்க்கவும். உங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசும் போது உங்கள் வார்த்தைகளை கவனிக்கவும். தேவையற்ற செலவுகளில் இருந்து விலகி இருக்கவும். எப்போதோ செய்து வைத்த முதலீடுகள், இந்த வாரம் உங்களுக்கு பயணுள்ளதாக இருக்கும். 

10.மகரம்:

நண்பர்கள், அன்புக்குரியவர்கள், குடும்பத்தாருடன் எங்காவது சேர்ந்து வெளியில் செல்ல வாய்ப்பிருக்கிறது. வேலையில் கொஞ்சம் அதிக நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பலருக்கு, எதிர்பார்த்த சம்பள உயர்வு வந்து சேரும். நீங்கள் கொஞ்சம் பரப்பான வாழ்கையில் சுற்றி வருவதால், காதலி/காதலனுக்காக நேரம் செலவிட திணருவீர்கள். இந்த வாரம், பலர் பண விஷயத்தில் பொருப்புடன் செயல்படுவீர்கள். 

11.கும்பம்:

அலுவலக வாழ்க்கையை விட வீட்டு வாழ்க்கையில் இந்த வாரம் அதிகளவில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வீட்டை அலங்கரிக்கவும் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் உங்களை விட உங்களது அன்புக்குரியவர் உங்கள் மீது பாசமாக இருப்பார். வெளி ஆட்களுடன் பேசுகையில் அமைதியை கடைப்பிடிப்பது சிறந்தது. 

12.மீனம்:

மனதுக்கு பிடித்தவர்களுடன் எங்காவது பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் நன்றாக பேசி, ஒருவருடன் ஒருவர் நன்றாக நேரம் செலவிட ஆசை ஏற்படும். உங்கள் உணர்வுகளை எந்த வித பயமும் இன்றி வெளிப்படுத்துவீர்கள். காதல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களுக்காக விவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் செயல்களை விடாமுயற்சியுடன் செய்ய உந்துதல் ஏற்படும். 

மேலும் படிக்க | செவ்வாய்க்கிழமையில் கடன் வாங்கவே கூடாது! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News