நவம்பர் 11 சுக்கிரன் பெயர்ச்சியால் மனம் வருந்தப் போகும் ‘2’ ராசிகள்! பரிகாரம் இது

Venus Transit: விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 2 ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமான காலமாக அமையும். சுக்கிரனின் பாராமுகத்தால் வாழ்வில் நிம்மதி குறையும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2022, 06:40 AM IST
  • சுக்கிரனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும்
  • எதிர்பாராத பண விரயங்கள் ஏற்படும்
  • நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்
நவம்பர் 11 சுக்கிரன் பெயர்ச்சியால் மனம் வருந்தப் போகும் ‘2’ ராசிகள்! பரிகாரம் இது title=

புதுடெல்லி: இன்னும் 8 நாட்களில் துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகவிருக்கிறார். செல்வம், செழிப்பு, அழகு, அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் இடம் மாறுவது, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், விருச்சிக ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் 2 ராசிக்காரர்களுக்கு கவலை தரும் காலமாக இருக்கும்.

சந்திரனைப் போலவே, சுக்கிரனும் ஒளிரும் கிரகங்களில் ஒன்றாகும் மற்றும் வெள்ளை நிறத்துடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது. வெள்ளை உணவுகள், வெள்ளை ஆடைகள், வெள்ளி நகைகள், வைரங்கள் உட்பட வெண்மையான அனைத்து பொருட்களுடனும் சுக்கிரன் இணைக்கப்பட்டுள்ளது.

சுக்கிரனின் பரிவர்த்தனையின்போது, ஏழைகளுக்கு பால் மற்றும் அரிசி போன்ற வெள்ளைப் பொருட்களை வழங்குவது மற்றும் வெள்ளி மற்றும் சுக்கிரன் தொடர்பான நகைகளால் செய்யப்பட்ட நகைகளை அணிவது போன்றவை, தாக்கத்தைக் குறைக்கும்.

பொதுவாக, விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, விளக்கு ஏற்றுவது, வெண்ணிற பூக்களை கடவுளுக்கு அணிவித்து பூஜை செய்வது, மற்றும் சுக்கிரனை சாந்திப்படுத்தும் மந்திரங்களைச் சொல்லி வணங்குவது ஆகியவை பொதுவான பரிகாரங்கள் ஆகும்.

ஓம் ஷும சுக்ராய நம:
ஓம் த்ரம் த்ரீம் த்ரும் ஸஹ ஶுக்ராய நம:
ஆகிய மந்திரங்களைச் சொல்லி சுக்கிரனை பூஜியுங்கள்.

மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்

சுக்கிரனின் விருச்சிக ராசி சஞ்சார காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

மிதுனம்: மிதுன ராசியினருக்கு 2022 நவம்பர் 11 ஆம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருக்காது. விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். சுக்கிரன் உங்கள் பன்னிரண்டாவது வீட்டைப் பார்ப்பதால், நீங்கள் பயணத்திற்கு பணம் செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. 

திருமணமானவர்களுக்கு மனதில் சஞ்ச்லம் அதிகரிக்கும். முடிந்த அளவு வெளியில் உண்பதைத் தவிர்க்கவும். வாய் கட்டுப்பாடு, பிரச்சனைகள் வராமல் தடுக்கும் என்றால் உணவுக் கட்டுப்பாடு நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  

மேலும் படிக்க | சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் 2022 நவம்பர் 11 அன்று விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது, தனுசு ராசிக்காரர்கள், கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். தொழில்முறையில் மோசமான காலம் இல்லை என்று சொன்னாலும், நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம், அதற்காக பணம் செலவழியலாம்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News