திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை என்ன? ஏழுமலையானே பார்த்துக் கொள்வார்! நாளை மகாசாந்தி ஹோமம்!

TTD Arranged Maha Shanthi Homam After Laddu Issue :  திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மகா சாந்தி ஹோமம் திருமலையில் நடைபெறுகிறது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2024, 06:26 PM IST
  • திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாமிச கொழுப்பு கலந்ததற்கான சாத்தியக்கூறுகள் என்ன?
  • மாமிச கொழுப்பின் விலை நெய்யின் விலையை விட அதிகம்
  • நெய்யில் என்ன கலந்தது என்பதை அறிய பரிசோதனை உள்ளதா?
திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை என்ன? ஏழுமலையானே பார்த்துக் கொள்வார்! நாளை மகாசாந்தி ஹோமம்! title=

திருமலை திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில தினங்களாக உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பான தோஷங்களை தீர்க்க மகாசாந்தி ஹோமம் நடைபெறவிருக்கிறது. திங்கள்கிழமை திருமலை ஸ்ரீவாரி கோயிலில் மகாசாந்தி யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

திருமலை திருப்பதி கோவிலில் உள்ள யாக மண்டபத்தில் அர்ச்சகர்கள் யாகம் நடத்துவார்கள். நாளை (செப்டம்பர் 23, 2024 திங்கட்கிழமை) ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாளில் இந்த யாகம் நடத்தப்படுகிறது. ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடத்த ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்ட்டுள்ளது.

மகா சாந்தி ஹோமம் என்பது உலகம் முழுவதும் சந்தோஷமும், சாந்தியும் நிலவுவதற்காக நடத்தப்படுவதாகும். இந்த ஹோமம் நடத்தப்படுவதால் பல விதமான நோய்கள், தொழில் இழப்புக்கள் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். செல்வ வளம், ஆரோக்கியம், அமைதி ஆகியவை கிடைக்கும். வருமானம் பெருகும். மனக்கவலைகள் தீரும். இந்த மகா சாந்தி ஹோமம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படவிருக்கிறது. இந்த சிறப்பு ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, நன்மை அடையும் படி திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!

திருப்பதி என்றாலே லட்டு என்று சொல்லும் அளவுக்கு, ஏழுமலையானுக்கு உகந்த பிரசாதமான திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பதாக இன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டு அரசியலா இல்லை உண்மையா என்ற பட்டிமன்றம் ஒருபுறம் என்றால், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாமிச கொழுப்பு கலந்ததற்கான சாத்தியக்கூறுகள் என்ன?

பொதுவாக கொழுப்பு மூன்று வகைப்படுகிறது. ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides), நிறைவுற்ற கொழுப்புகள் (saturated fats), நிறைவுறா கொழுப்புகள் (unsaturated fats). தாவரக் கொழுப்பாக இருந்தாலும் சரி, விலங்குக் கொழுப்பாக இருந்தாலும் சரி, இந்த 3 வகை கொழுப்புகளில் தான் உலகில் உள்ள அனைத்து கொழுப்புகளுமே அடங்கிவிடும். 

பொதுவாக நெய்யில் கலப்படம் செய்ய வேண்டுமென்றால், நெய்யுடன் தாவரக் கொழுப்பைத்தான் சேர்ப்பார்கள். காரணம், கலப்படமே அடக்க விலையை குறைக்கத் தான் என்னும்போது, மலிவான கொழுப்பு தான் சேர்க்கப்படும் என்பது பொதுவான கருத்து.

மேலும் படிக்க | இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்..
ஏனென்றால்  விலங்குக் கொழுப்பு விலை உயர்வானது. உதாரணத்துக்கு ஒரு லிட்டர் மாட்டுக் கொழுப்பு சுமார் 800 ரூபாய், ஆனால் ஒரு லிட்டர் ஆவின் நெய்யே 700 ரூபாய்தான். திருப்பதியில் லட்டு தயாரிக்க மொத்தமாக டன் டன்னாக நெய் வாங்கும்போது, அதில் விலங்குக் கொழுப்பு சேர்த்தால் அடக்க விலை அதிகமாகுமே தவிர குறையாது என்பதன் அடிப்படையில் பார்த்தால், விலங்கு கொழுப்பு அல்லது மீன் எண்ணெய் (இதன் விலையும் அதிகம்) சேர்க்க வாய்ப்பே இல்லை. 

ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி தான் இந்த சர்ச்சை பெரிதுபடுத்தப்படுகிறது. உண்மையில், நெய்யில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய எந்தவிதமான தனிப்பட்டப் பரிசோதனையும் கிடையாது. தூய பசு நெய்யில் வேற்று எண்ணெய்கள் கலப்படம் உள்ளது என்பதை மட்டுமே சோதனைகள் வெளிக்காட்டும்.

நெய்யில் கலப்படம் என்றால், அது வேறு எந்த எண்ணெயாக இருக்கலாம், அதிலும் பசு நெய்யில் எருமை நெய் கலந்தாலும், கலப்படம் என்று தான் ஆய்வு காட்டும். எனவே கலப்படம் இருந்தாலும் அது தாவர எண்ணெயாக இருக்கும் வாய்ப்புகள் தான் அதிகம். 

எனவே திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்திருந்தால், அது வேற்று எண்ணெயாகவும் இருக்கலாம். மாட்டுக் கொழுப்பாக இருந்தாலும் சரி, எருமை நெய்யாக இருந்தாலும் சரி, பரிசோதனை ரிசல்ட் ஒரே மாதிரிதான் இருக்கும்.

மேலும் படிக்க | கேதுவும் சூரியனும் கன்னி ராசியில் இணைந்தால் மோசமாக கஷ்டப்படப்போகும் பாவப்பட்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News