துலாம் ராசிக்கு செல்லும் சூரியன்; சிக்கலில் சிக்க போகும் ‘5’ ராசிகள்!

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தொடங்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2022, 02:48 PM IST
  • குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள்.
  • வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
  • வியாபாரம் செய்வதில் சிரமங்கள் வரும்.
துலாம் ராசிக்கு செல்லும் சூரியன்; சிக்கலில் சிக்க போகும் ‘5’ ராசிகள்! title=

சூரிய பெயர்ச்சி 2022: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் அக்டோபர் 17 அன்று தனது ராசியை மாற்றப் போகிறார். இந்நாளில் கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்குள் நுழைவார்கள். பெரும்பாலான ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சி காலத்தால் பெரிதும் பலன் அடைவார்கள். எனினும், 5 ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் செய்யும் வேலைக்கு பலன் இல்லாமல் போகலாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே அந்த ராசிக்காரர்கள் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள்

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகத்தின் சஞ்சாரத்தால் குடும்ப வாழ்க்கையில் தகராறுகளைச் சந்திக்க நேரிடும். வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், இதனால் மனநலம் கெடும். இதுபோன்ற சூழ்நிலைகள் பணியிடத்திலும் உருவாகும். அலுவலக சூழ்நிலை உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள். புதிய வேலைகள் மற்றும் பயணங்களை தொடங்க வேண்டாம். நிவாரணம் பெற, சூரிய பகவான் தொடர்பான மந்திரங்களை 108 முறை உச்சரிக்கவும்.

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள்

கடகம்: இந்த ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சு கடுமையாக இருப்பதன் காரணமாக, தகராறு அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை, நீங்கள் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற மறக்காதீர்கள். அது உங்களை காக்கும். நீங்கள் புதிய சொத்து அல்லது வாகனம் வாங்க நினைத்தால், கண்டிப்பாக பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

வியாபாரம் செய்வதில் சிரமங்கள்

மேஷம்: வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்காது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் செய்வதற்கு முன், அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. கவனமாக இருங்கள். பிறருடன் பேசும் போது கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில், துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உரையாடல் மூலம் தீர்க்க முயற்சிக்கவும். இந்தக் கஷ்டங்களிலிருந்து விடுபட, காலையில் உதிக்கும் சூரியனை வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள்.

வேலையை குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல்

கன்னி: இந்த ராசிக்காரர்கள் வருமானம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்களின் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். நீங்கள் பணிபுரியும் இடத்தில், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கலாம். பரிகாரத்திற்காக, தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்யத் தொடங்குங்கள்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

திருமண வாழ்க்கையில் சிக்கல்

மிதுனம்: சூரியனின் பெயர்ச்சி, உங்கள் திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை கொண்டுவரும். கடினமாக உழைத்தாலும், உங்கள் விருப்பப்படி பலன் கிடைக்காது. அதனால் உங்கள் கோபம் அதிகரிக்கும். இந்த கோபம் உங்கள் அலுவகத்திலும் குடும்பத்திலும் வெளிப்படும். அவ்வாறு செய்வது உங்கள் இமேஜை பாதிக்கலாம். இந்த கெட்ட காலத்திலிருந்து விடுபட, ஞாயிற்றுக்கிழமை அன்று செம்புப் பாத்திரத்தில் வைத்த தண்ணீரி நீராடி சூரிய பகவானை பூஜிக்க நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News