Tamil Pudhalvan Scheme 2024 Eligibility And Benefits : கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நலிந்த நிலையை சேர்ந்த மக்களுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மட்டுமின்றி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவியாக இருக்கிறது.
மாணவ மாணவிகளுக்கான திட்டங்கள்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான திட்டங்களும் நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை உணவு திட்டம் மக்களிடையே மாணவர்கள் மத்தியிலும் உள்ள வரவேற்பை பெற்றிருந்தது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழா ஏற்பாடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரூ.455 கோடியே 32 லட்சம் மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, 67 வது தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவ மாணவிகளை பாராட்டு விழா, பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களை பாராட்டு விழா, தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் ஐம்பெரும் விழா ஆகியவை நேற்று நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டம்தான், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாகும்.
தமிழ் புதல்வன் திட்டம்:
சில நாட்களுக்கு முன் இத்திட்டம் பற்றி பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். சொன்னது போலவே தமிழ்ப்புதல்வன் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பேசிய முதல்வர், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் காலை உணவு திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் உன்கிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அதில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் புதுமைப் பெண் திட்டமும் குறிப்பிடத்தக்கது என்று கூறினார். இந்த மகிழ்ச்சியை மாணவர்களின் முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!
யார் யாருக்கு கிடைக்கும்?
>தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
>திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஆணாக இருக்க வேண்டும்.
>தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களால் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
>அரசு பள்ளியில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்
>விண்ணப்பதாரர் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
>பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
>ஆதார் அடையாள அட்டை
>பள்ளி தேர்ச்சி பெற்ற உரிய சான்றிதழ்
>முகவரிக்கான உரிய ஆதாரம்
>வருமான சான்றிதழ்
>குடும்ப அடையாள அட்டை
>தொலைபேசி எண்
> மின்னஞ்சல் முகவரி
> வங்கி விவரங்கள்
இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டவுடன் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ