சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை முதல் இந்த ராசிகளுக்கு ஜோராக இருக்கும்..... முழு ராசிபலன் இதோ

Sani Vakra Peyarchi Palangal: கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் ஜூன் 30 ஆம் தேதி வக்கிரப் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளிலும் ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Vakra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனிபகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். தற்போது கும்ப ராசியில் இருக்கும் அவர் 30 ஆம் தேதி கும்பத்திலேயே வக்கிர பெயர்ச்சி ஆகிறார். மேஷம் முதல் மீனம் வரை சனிவக்ரப் பெயர்ச்சியால் ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.

1 /13

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். கணவன் மனைவியிடையே புரிதல் குறைந்து சண்டைகள் வரலாம். வேலை தேடுபவர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம். நஷ்டத்திற்கான காலமாக இது இருக்கும்.

2 /13

ரிஷபம்: சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சில பிரச்சனைகளை கொண்டு வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

3 /13

மிதுனம்: சனி வக்கிர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பண வரவு அதிகமாகும்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பலவித நற்பலன்களை அள்ளித் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அன்பும் இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மாத வருமானம் அதிகரிக்கும்.  

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்ச்சி பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பயணங்கள் அற்புதமான நன்மைகள் ஏற்படும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பலவித நல்ல பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும்.

7 /13

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பல நன்மைகளை அளிக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மனதில் நிம்மதி இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். சனி அருளால் ஆன்மீகத்தில் நாட்ட அதிகரிக்கும்.  

9 /13

தனுசு: சனி வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான நன்மைகளை கொண்டு வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலையும் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

10 /13

மகரம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அலைச்சலையும் மன உளைச்சலையும் அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை. எந்த ஒரு புதிய வேலை தொடங்கும் முன்பும் பலமுறை ஆராய்ந்து நெருங்கியவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தொடங்குவது நல்லது.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் பல வித நன்மைகள் நடக்கும்.  குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பண வரவு அதிகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.