லோக்சபா தேரத்ல் 20204 காரணமாக ரேஷன் கார்டு விநியோகம் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ரேஷன் கார்டு விநியோகத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டு எதற்கு?
ரேஷன் அட்டை என்பது தமிழக அரசு சார்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் இலவசமாகவும், மலிவு விலைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை, டீ தூள் போன்ற பொருட்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் குடும்ப அட்டை ஆகும். இந்த அட்டையை வைத்திருக்கும் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத்தொகை, பேரிடர் கால நிவாரணம் போன்ற திட்டங்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம்
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் புதிய ரேஷன் அட்டை விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் புதியதாக திருமணமானவர்கள் மற்றும் ரேஷன் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்றவற்றைத் திருத்தம் செய்ய முடியாமல் இருந்தது.
மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!
இதனை அடுத்து தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டையைப் பெற இணையதளம் மூலம் அல்லது நேரடியாகவோ மற்றும் இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று உணவுப்பொருள் வழங்கும் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது விண்ணப்பம் செய்த மனுக்களை ஆய்வு செய்து மீண்டும் 2 லட்சம் குடும்பங்களுக்குப் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணியானது தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டைர, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ்
ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
- ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
- இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.
- அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
- நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்
- பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்
- பின்னர் நீங்கள் 'உறுதிபடுத்து' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்
இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ