சூரியனின் ராசி மாற்றத்தால் ஆனி மாதம் முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதிக்கும் ராசிகள்!

Surya Peyarchi June 15 : ஜூன் 15ம் தேதியான இன்று நடைபெற்ற சூரியப் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் சிலபல மாற்றங்கள் ஏற்படும் என்றாலும், குறிப்பாக சில ராசிகளின் அதிர்ஷ்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. 

அதிர்ஷ்ட மாற்றத்தின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை அனுபவிக்கும் ராசிகள் சில. அதிர்ஷ்டத்தால் மனம் மகிழும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்... 

1 /9

ஜோதிடப்படி, நவகிரகங்களில் சூரியனே பிதுர் காரகர் என்று அழைக்கப்படுகிறார். சூரியன், ஒருவரின் வாழ்க்கையில் சுய நிலை, சுய உணர்வு என உள்ளார்ந்த உணர்வுகளுக்கும், செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், உடல் சுகம், நன்னடத்தை வீரம் என ஆளுமைப் பண்புகளுக்கும் காரணமாகிறார். சூரியனின் இன்றைய ராசிப் பெயர்ச்சியால் மகிழ்ச்சியடையும் ராசிகள் சில.

2 /9

ராசிமண்டலத்தில் உள்ள 12 ராசிகளையும் சூரியன் சுற்றி வர ஓராண்டு ஆகிவிடுகிறது. தமிழ் ஆண்டு பிறப்பு என்பது சூரியன் மேஷத்தில் நுழையும்போது ஏற்படுகிறது. ஜோதிடத்தின்படி சூரியனே அனைத்து கிரகங்களுக்கும் தலைவர். அவரின் சிறிய நகர்வு கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

3 /9

தற்போது மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கும் சூரிய பகவானின் பெயர்ச்சியால், இன்று தமிழ் மாதம் பிறந்திருக்கிறது. ஆனி மாதம் முதல் நாளான இன்று முதல் ஒரு மாதத்திற்கு மிதுனத்தில் உள்ள சூரியனால் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

4 /9

மிதுன ராசியில் ஏற்கனவே சுக்கிரன் மற்றும் புதன் இருக்கும் நிலையில் சூரியனும் அதே ராசியில் பெயர்ச்சியடைந்திருப்பதால் திரிகிரஹி யோகமும் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் சூரியனின் பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறும் ராசிகள் அதிர்ஷ்டமானவைகளாக கருதப்படுகின்றன

5 /9

சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்

6 /9

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் சூரியன், எதிர்பார்த்த வெற்றியைத் தருவார். நீண்ட நாட்களாக காத்திருந்த சில வேலைகள் முடியும். புதிய வேலை கிடைக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

7 /9

சூரியப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். வேலையில் வெற்றி, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். எதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

8 /9

சூரியனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த நற்பலன்களைத் தரும். சில நல்ல செய்திகள் வந்து சேரும், அது பதவி உயர்வு தொடர்பானதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். புதிய வேலை கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விடும் காலம் ஏற்படும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கலாம்  

9 /9

 சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியைத் தரும். உங்களின் தற்போதைய வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வேலையில் உயர் பதவி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் மிகவும் மகிழ்வீர்கள். வாகன சுகம் பெறுவீர்கள்.