Sani Palan: நண்பர்களையும் பகைவராக்கும் சனி உதயம்! எச்சரிக்கை 3 ராசிக்காரர்களே

Shani Uday 2023: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் மார்ச் 6ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமானார். அஸ்தமன சனியாய் அமைதியாய் இருந்த சனி, இனி அதிரடியாக களம் இறங்கி கர்மபலன்களைக் கொடுப்பார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 7, 2023, 09:36 PM IST
  • அஸ்தமன சனியாய் அமைதியாய் இருந்த சனி!
  • அதிரடியாக களம் இறங்கி கஷ்டத்தை கொடுக்க தயாரானார் சனீஸ்வரர்
  • மார்ச் 6ம் தேதியன்று கும்பத்தில் உதயமானார் சனி பகவான்
Sani Palan: நண்பர்களையும் பகைவராக்கும் சனி உதயம்! எச்சரிக்கை 3 ராசிக்காரர்களே title=

Shani Uday Bad Effects: கும்பத்தில் உதயமான சனி தலைவிதியை மாற்றும் செயலில் இறங்கிவிட்டார். ஹோலிக்கு முன், சனி பகவான் அவருக்குப் பிடித்த ராசியில் உதயமாகிவிட்டார். சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த உதயம் பல கெடுதல்களை அளிக்கும். ஹோலி பண்டிகை முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மார்ச் 6, 2023 இரவு 11.36 மணிக்கு சனி பகவான் உதயமானார். கும்ப ராசியில் பெயர்ச்சியான சில நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமான சனீஸ்வரர். மூன்று ராசிகளுக்கு மூதேவியின் அருளை கொடுப்பார்.

கன்னி:

சனியின் உதயத்தினால், உங்கள் கடன் சுமை அதிகரிக்கும். கடன் சுமை உங்கள் நிம்மதியை குலைக்கும். அத்தியாவசியமான தேவை இருந்தால் தவிர கடன் வாங்க வேண்டாம். மேலும் இந்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.உங்கள் நிதி நிலைமையை நிலைப்படுத்த நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பிக் கேட்டு சங்கடப்படுத்துவார்கள், நண்பர்களுடன் சண்டை வருவதற்கான வாய்ப்புகளும் தென்படுவதால், கவனமாக இருங்கள்.  

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! 

விருச்சிகம்:
இந்த ஆண்டு, கும்ப ராசியில் பெயர்ந்த சனி, நீங்கள் குடியிருக்கும் வீட்டை மாற்ற வைப்பார். இந்த மாற்றம் உங்களை உணர்ச்சிவசப்பட வைப்பதுடன் மனரீதியாக வருத்தங்களை அதிகரிக்கும்.. குடும்பம் மற்றும் வீட்டின் மீதான கவலை சோர்வடையச் செய்யும்.  

இந்த காலகட்டத்தில், எந்த ஒரு சொத்தையும் வாங்கும் முன், அதை சட்டப்பூர்வமாக முழுமையாக விசாரிக்கவும். தாயாரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அவரது உடல்நிலையில் அக்கறை காட்டவும்.

மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்கும். சனிப்பெயர்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த சனிப்பெயர்ச்சியின் போது, உங்கள் பாதங்களில் வலி, கணுக்கால் வலி அல்லது காலில் காயம் அல்லது சுளுக்கு ஏற்படலாம். இது தவிர, கண்களில் நீர் வடிதல், கண்களில் வலி அல்லது பார்வை தொடர்பான புகார்களும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

இந்தக் காலக்கட்டத்தில் சோம்பல் அதிகரிக்கும், ஆனால் அதிலிருந்து விடுபட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News