சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தொடங்கும்

Sani Nakshatra Peyarchi Palangal : சனி பகவான் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் இடப் பெயர்ச்சி அடைகிறார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை எவை என்று காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2024, 04:37 PM IST
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
  • அலுவலகத்தில் நல்ல மரியாதை பெறுவீர்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தொடங்கும் title=

Sani Puratathi Nakshatra Peyarchi Palangal : நவக்கிரகங்களின் நாம் செய்யும் கர்மாவை பொறுத்து பலன் தருபவர் சனி பகவான் ஆவார். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். அதேபோல் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் சனி பகவான் விளங்குபவர் சனி ஆவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக்கும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சனி பகவான் வருகிற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். பூரட்டாதி நட்சத்திரம் குரு பகவானின் அதிபதி நட்சத்திரம்ஆகும். எனவே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் உயரங்களை அடைவார்கள். எனவே சனியின் நட்சத்திர மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபகரமான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சதுர்கிரஹி யோகம்... ஏப்ரலில் பட்டையை கிளப்பப் போகும் 5 ராசிகள் இவை தான்!

கன்னி ராசி (Virgo Zodiac Sign): ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். வேலையில் வெற்றி பெற நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கல். பணியிடத்தில் நல்ல பெயரையும், வெற்றியையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொருப்புகளைப் பெறலாம், இந்த பொறுப்புகள் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயத்தை பெறுவீர்கல். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign): சனியின் நட்சத்திர மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா வகையான மகிழ்ச்சியையும் தரும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். எதிர்காலத்தில் நல்ல ஒப்பந்தத்தை பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பண வரவைப் பெறுவீர்கள். செல்வம் பெருக வாய்ப்புகள் உள்ளது. அலுவலகத்தில் நல்ல மரியாதை பெறுவீர்கள்.

கும்ப ராசி (Aquarius Zodiac Sign): உங்கள் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். அத்தகைய சூழ்நிலையில், சனி நட்சத்திர பெயர்ச்சியால் நீங்கள் மங்களப் பலனைப் பெறுவீர்கல். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மரியாதை, நம்பிக்கை மற்றும் செல்வம் பெருகும். உத்யோகத்தில் பதவி மற்றும் கௌரவம் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சூரிய கிரகணம் பலன்கள்: ஏப்ரல் 8 முதல் இந்த ராசிகளுக்கு பணவிரயம், கஷ்டங்கள் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News