இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!

Shadow Planets Power : நிழல் கிரகங்களாக இருந்தாலும், அதிக சக்தியுள்ள கிரகங்களாக இருக்கும் ராகு கேது இரண்டுமே ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் ஏற்படும் என்பதை கூறுபவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2024, 06:29 PM IST
  • வாழ்க்கையின் கஷ்ட காலத்தை முடிவு செய்யும் கிரகம்!
  • நிழல் கிரகங்களில் சாம்ராஜ்ஜியம்
  • நன்மை தீமைகளை நேர் செய்யும் கிரகங்கள்
இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்! title=

நவகிரகங்களில் சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் சொந்த வீடு இல்லை. இந்த இரு கிரகங்களும் தாங்கள் சஞ்சரிக்கும் வீட்டிலேயே பலம் பெற்று ஆதிக்கம் செய்கின்றனர். ஆனால், இந்த இரு கிரகங்களுக்கு உச்ச வீடு மற்றும் நீச்ச வீடுகள் உண்டு. ராகுவின் உச்சவீடு விருச்சிகம் என்றால், ரிஷபம் நீச வீடாக உள்ளது. இதுவே கேதுவிற்கு கடகம் உச்ச வீடாகவும், ரிஷபம் நீச வீடாகவும் உள்ளது. 

இந்தப் பதிவில் நிழல் கிரகங்களில் முதன்மையான ராகுவின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம். நிழல் கிரகம் சாயா கிரகம் என்று அறியப்படும் ராகுவிற்கு புதன், குரு சம கிரகங்கள் ஆகும். ராகுவுக்கு, சூரியன், சந்திரன், செவ்வாய் பகை கிரகங்கள் என்றால், சனியும், சுக்கிரனும் நண்பர்கள்.  ராசியில் ராகு ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், அவருடைய சஞ்சாரம் எப்போதும் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் அதாவது வக்ர கதியிலேயே இருக்கும். 

ராகு கேது இரு கிரகங்களுமே ஒன்றுக்கொன்று நேருக்கு நேராய் 180 டிகிரியாக வக்ரமாக நகர்வதால், இரு கிரகங்களும் ஒரே ராசியில் உச்சம் பெறுவதோ நீசம் பெறுவதோ பெறுவதோ இல்லை என்பதும், நிழல் கிரகங்களுக்கு வக்ர கதியே அஸ்தங்கமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ராகு, கேது ஆகிய இரு சாயா கிரகங்களுக்கும் தனி உருவம் இல்லை. 

மேலும் படிக்க | தோஷமோ யோகமோ? சந்திரனோடு சேர்ந்த சனி குடும்ப வாழ்க்கையில் கும்மியடிச்சிடுவார்! கவனம்...

தந்தை வழி உறவு, கடற்பயணம், துன்பம், கடுமையான பேச்சு, சூதாட்டம், பயணம், வாழ்க்கைத்துணையை இழப்பது, திருட்டு, தோல் சம்மந்தப்பட்ட வியாதி, நாய் மற்றும் எதிரிகளால் தொல்லை, அடிமைத் தொழில்,  அவமானம், வெறுப்பு என பலவிதமான விஷயங்களை ஒருவரின் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடமே முடிவு செய்கிறது. 

ஒருவரின் ஜென்ம லக்னத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகர் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டார், கவரும் தன்மை இருக்காது. மற்றவர்களை எடுத்தெறிந்து பேசும் குணமும், பார்த்தவுடனே யாரையும் வசீகரிக்கும் அமைப்போ இல்லாமல் இருப்பார். 

லக்னத்திற்கு 7 ல் சனி, செவ்வாய், சூரியன் இவர்களுடன் ராகுவோ கேதுவோ இணைந்தால், வாழ்க்கைத்துணை அமைந்தாலும் அதை ஏதேனும் ஒருவிதத்தில் இழந்துவிடுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் ராகு 9 ல் ராகு இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும். ராகுவிற்கு நட்பு கிரகமான சனியுடன் அவர் இணைந்திருந்தால், குடும்பத்தில் உள்ள பெண்களால் யோகம் ஏற்படும், எதிரிகளை வெல்லும் வலிமை கொடுக்கும். 

மேலும் படிக்க | மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...

மற்ற எல்லா கிரகங்களையும் விட பலம் பொருந்திய ராகு கேதுவிற்கு என தனியான நாள் கிடையாதென்றாலும், தினசரி ஒன்றரை மணி நேரம் ராகு மற்றும் கேதுவுக்கு உரிய நேரங்களாக உள்ளன. கேது காலம் என்று சொல்வதற்கு பதிலாக அதனை எமகண்டம் என்று சொல்கின்றனர். ராகு மற்றும் கேதுவுக்கு உரிய காலத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது. 

ராகுவால் பாதிக்கப்படாத ராசிகள் 
ராகுவின் நட்சத்திரமாகிய திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு தீம்பலன்களைக் கொடுப்பதில்லை. அதேபோல, ஜாதகத்தில் லக்னத்தில் 1,3,5,9,10,11 ஆகிய இடங்களில் ராகு இருந்தாலும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் ராகு இருந்தாலும், ராகு காலம் கெடுதல் செய்வதில்லை. 
 
ராகுவிற்கு உகந்த தெய்வம் துர்க்கை அம்மன்  
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு தோஷம் விலகும். அதேபோலா பைரவ வழிபாடும் ராகு தோஷத்தை போக்கும்.

ராகு காயத்ரி மந்திரம்  
ராகு தோஷத்தை போக்க, வளர்பிறை பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபடலாம். ராகுவை வழிபடும்போது, ”ஓம் நாகத்வஜாய வித்மஹே! பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத்” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடவேண்டும். அதிலும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வணங்குபவர்களுக்கு ராகு தோஷம், நாக தோஷம் என பல்வேறு தோஷங்கள் விலகும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசிக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்பும் வித்தியாசங்களும்! நட்புக்கு ஜே போடும் மேஷ லக்னம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News