சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்

Sun Venus Conjunction: சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அடுத்த 15 நாட்களில் பெரிய நன்மைகளை பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 1, 2022, 05:09 PM IST
  • சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் இணைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம் title=

சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை: சுக்கிரன் தனது ராசியை மாற்றி சிம்ம ராசியில் நுழைந்துள்ளார். சூரியன் ஏற்கனவே தனது சொந்த ராசியான சுக்கிரனில் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி, சூரியனுக்கு சொந்தமான சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுக்கிரன்-சூரியன் சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அளிக்கவுள்ளது. 

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அடுத்த 15 நாட்களில் பெரிய நன்மைகளை பெறுவார்கள், சாதனைகளை செய்வார்கள். சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் சூரியன் - சுக்கிரன் சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச்செய்ய உள்ளது. 

சூரியன் - சுக்கிரன் சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக அதிர்ஷ்டத்தை அளிக்கும்

ரிஷபம்:

சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் சூரியன் சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். தொழிலில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மதிப்புமிக்க ஒரு பொருளை வாங்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். வசதிகள் பெருகும். பழைய ஆசைகள் நிறைவேறும். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

சிம்மம்:

சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் இணைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும். இதனால் நிதி நிலைமை வலுப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன் சேர்க்கை மிகுந்த பலனைத் தரும். அவர்களின் வருமானம் கூடும். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். அதிக ஊதியத்துடன் புதிய வேலை வாய்ப்பு வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Planet Transits 2022: அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News