புத்தாண்டு ராசிபலன் 2024: வரும் ஆண்டில் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள்

New Year 2024 Horoscope: 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், சில ராசிக்காரர்கள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஸ்தானத்தால் பலனடையும் அதே வேளையில், சில ராசிக்காரர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 24, 2023, 11:40 AM IST
  • தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும்.
  • திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம்.
  • வாழ்க்கையின் பல பகுதிகளில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம்.
புத்தாண்டு ராசிபலன் 2024: வரும் ஆண்டில் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் title=

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2024: 2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது. 2023 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டிலும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். கிரகங்களின் நிலை மாற்றங்கள் 12 ராசிகளையும் பாதிக்கும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, வரும் ஆண்டு பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆங்கில புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடச் செய்யும், மேலும் எச்சரிக்கையுடன் எந்த ராசிகள் இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

2024 ஆம் ஆண்டில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்:

ரிஷப ராசி (Taurus Zodiac Sign): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் (New Year Horoscope 2024) ஆரம்பம் சுத்தமா சாதகமாக இருக்காது என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். புத்தாண்டு 2024 ஆண் ஆண்டு ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மே 1 ஆம் தேதி, 2024 வரை நீங்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மே 1 ஆம் தேதிக்குப் பிறகு, குருவின் (குரு பெயர்ச்சி) காரணமாக உங்கள் பிரச்சனைகள் குறையும். 2024 ஆம் ஆண்டில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சனியின் (Shani Dev) காரணமாக, உங்கள் தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும், தனிப்பட்ட உறவுகளில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | சனி உச்சம் பெறுகிறார்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் கோடீஸ்வர யோகம்

மிதுன ராசி (Gemini Zodiac Sign): ஜோதிடத்தின் படி 2024 புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. புதன் மற்றும் சுக்கிரனின் (Mercury and Venus) தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். புதிய ஆண்டில், உங்கள் தொழிலில் குறுக்குவழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கேதுவின் தாக்கத்தால் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம்.

தனுசு ராசி (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படலாம். உறவுகளில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு சிறிய அதிர்ஷ்டம் கிடைக்கும். சனியின் நிலை உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையின் பல பகுதிகளில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | துலாம் ராசியில் சூரிய பெயர்ச்சி: கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் இவைதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News