இன்றைய ராசிபலன் நவம்பர் 3, 2023: இந்த ராசிகளுக்கு இன்று அமோகமான நாள், மகிழ்ச்சி பொங்கும்

Daily Rasipalan November 3, 2023: இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 3, 2023, 06:01 AM IST
  • மகர ராசியினருக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும்.
  • பணிகளை செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும்.
இன்றைய ராசிபலன் நவம்பர் 3, 2023: இந்த ராசிகளுக்கு இன்று அமோகமான நாள், மகிழ்ச்சி பொங்கும் title=

தினப்பலன், நவம்பர் 3, 2023: மனித வாழ்க்கையில் கிரக நிலைகளுக்கும், அவற்றின் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒருவரது நட்சத்திரம், ராசியை பொறுத்தும் அவர்களது குணாதிசயங்கள் மாறுபடும். கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அன்றைய பலன்கள் அமைகின்றன.  இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கே காணலாம். 

மேஷம்

வேலையில் சமீபத்திய பின்னடைவுகள் உங்கள் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. முடிவடைந்ததாக நீங்கள் நினைத்த ஒரு ஒப்பந்தம் இப்போது கிடைக்கும். பெற்றோர் அல்லது குடும்ப பெரியவரின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது குடும்ப அமைதியைக் காக்கும். உங்களில் சிலருக்கு ஊருக்கு வெளியே ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படலாம்.

ரிஷபம்

ஒரு முயற்சி வெற்றியடைய எதிர்பார்த்ததை விட அதிக செலவு தேவைப்படலாம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், பாஸ்ட்புட் உணவைத் தவிர்க்கவும். பயிற்சி பெறுபவர்கள் களத்திலும் வெளியிலும் அவர்களின் நடத்தைக்காக பாராட்டப்படுவார்கள். பயணத்தைத் திட்டமிடுபவர்கள் பாதுகாப்பாக இருக்க வானிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் 

உடல் ரீதியாக நீங்கள் நன்றாக இருப்பீர்கள், ஆனால் மனதளவில் நீங்கள் சற்று பதற்றமாக இருக்கலாம். ஒரு வாடிக்கையாளரின் பாராட்டு உங்கள் நாளை பிரகாசமாக்கும். சில்லறை வியாபாரிகள் இன்று நல்ல வரவை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையின் அறிவுரைகளை ஏற்றால் நல்லது. பாதுகாப்பான பயணத்திற்கு உங்கள் போக்குவரத்து முறையை கவனமாக தேர்வு செய்யவும்.

கடகம்

சரியான உடற்தகுதியை அடைய ஒருவரின் ஆலோசனை உதவும். தொழில்முறையில் பழைய நண்பர்களின் உதவியைப் பெற தயங்காதீர்கள். உங்களில் சிலர் திருமண நாள் அல்லது வேறு சில கொண்டாட்டங்களைத் திட்டமிடலாம். நீண்ட பயணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க இலகுவாக பயணம் செய்யுங்கள். கல்வித்துறையில் போட்டி சூழ்நிலையில் இருந்த சிரமங்கள் நீங்கும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.  

மேலும் படிக்க | நவம்பர் மாத பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட ராசிகளும்... முழு விபரம்..!!

கன்னி

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள்  கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும்.  

துலாம்

தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். 

விருச்சிகம்

பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள்.  

தனுசு

முன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். 

மகரம்
பணிகளை செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். மகர ராசியினருக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும்.  

கும்பம்
வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.

மீனம்

கலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி... 3 ராசிகளுக்கு பண விரயம்; கெடுபலன்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News