குரு நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம், பணம் கொட்டும்

Shani Purva Bhadrapada Nakshatra 2024: சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடையப் போகிறார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 24, 2024, 03:32 PM IST
  • பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
  • வாகனம் அல்லது சொத்து வாங்கலாம்.
குரு நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம், பணம் கொட்டும் title=

Sani Peyarchi in Purva Bhadrapada Purattathi Natchathiram 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். இதன் விளைவு மனித வாழ்க்கையிலும் நாடு மற்றும் உலகிலும் கட்டாயம் தென்படும். அந்த வகையில் ஹோலி பண்டிகைக்குப் பிறகு சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில், குரு நட்சத்திரத்தில் சனி நுழைவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஒளிரக்கூடும். மேலும், இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். எனவே இந்த ராசிகள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்...

மேஷம் (Aries Zodiac Sign)
சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் உங்கள் ஜாதகத்தின் 11வது வீட்டில் சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். எனவே, இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். நீங்கள் நல்ல அளவில் பணத்தை சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். அதே போல் பணத்தை சேமிப்பதிலும் வெற்றி அடைவீர்கள். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பல வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

ரிஷபம் (Taurus Zodiac Sign)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் சாதகமாக அமையும். ஏனெனில் சனி பகவான் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டைப் பார்த்து பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவில் வெற்றியைப் பெறலாம். வேலையில்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகள் தானாக தேடு வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் கிரகங்களின் சுப தாக்கத்தால் பணிகள் வேகமாக முழுமையயும். குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

மகரம் (Capricorn Zodiac Sign)
சனிபகவான் நட்சத்திரத்தில் ஏற்படும் மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமான நன்மை பயக்கும். ஏனெனில் சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி ஆவார். மேலும் இந்த நேரத்தில் அவர் உங்களது பணம் வீட்டிற்கு வருகை தருகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல், சமூகத்தில் மதிப்பும் உயரும், வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்களின் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாகனம் அல்லது சொத்து வாங்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

 

மேலும் படிக்க | Jupiter transit: 38 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள், பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News