உங்க ராசி என்ன? சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்

Venus Retrograde: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் அபரிமிதமான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பர்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2023, 04:58 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும்.
  • இந்த நேரத்தில், அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
  • இதனுடன், வேலைத் துறையில் புதிய வாய்ப்புகளைக் காணலாம்.
உங்க ராசி என்ன? சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு  லாபமோ லாபம் title=

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகின்றன. கிரகங்கள் அவ்வபோது வக்ர பெயர்ச்சி அடைகின்றன, பின்னர் வக்ர நிவர்த்தி அடைகின்றன. இந்த பெயர்ச்சிகளும் மாற்றங்களும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். 

வக்ர நிலையில் கோள்கள் அவற்றின் இயல்பான இயக்கத்தை விட மெதுவான வேகத்தில் நகரும், அதே சமயம் நேரடி இயக்கத்தின் போது, ​​கோள்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும். அதே நேரத்தில், சுக்கிரன் தற்போது சிம்மத்தில் வக்ர நிலையில் உள்ளார். சுக்கிரன் செல்வம், அழகு, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இதன் காரணமாக சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியும். இவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் அபரிமிதமான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பர்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் இவைதான்:

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி காரணமாக அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலத்தில் நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். இதனுடன், வேலைத் துறையில் புதிய வாய்ப்புகளைக் காணலாம். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இந்த நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். மனம் மகிழ்வாக இருக்கும். இது உங்கள் உறவுக்கு இனிமை சேர்க்கும். எந்த விதமான முரண்பாடுகளையும் தவிர்க்கவும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்மை தருவதாகக் கருதப்படுகிறது. இந்த காலத்தில் ​​நிதித் திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்கவும். இருப்பினும், பொருளாதாரத் துறையில் பெரும் லாபம் இருக்கும். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கும். இதுவரை கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். அதே சமயம் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகி வருகிறது.

மேலும் படிக்க | அடுத்த மாதம் அட்டகாசம்: செப்டம்பர் கிரக மாற்றங்கலால் இந்த ராசிகள் மீது பண மழை

கடக ராசி

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் இணக்கமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் நடத்தையை சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுக்கிரனின் அசுப பலன்களைத் தவிர்க்க நல்ல காரியங்களில் ஈடுபடவும். நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வசதி வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகமாகும். ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் சுப செலவுகள் அதிகரிக்கும்.  

 

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதனுடன், வேலைத் துறையில் புதிய வாய்ப்புகளைக் காணலாம். வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். அனைத்து செயல்களிலும் நிறைவு இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுங்கள். மேலும், நீங்கள் பங்குச் சந்தை, தங்கம்-வெள்ளி மற்றும் சொத்து ஆகியவற்றில் பரிவர்த்தனை செய்ய விரும்பினால், அதன் மூலம் இந்த காலத்தில் நல்ல லாபம் காண வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | பூரட்டாதி நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News