லட்சுமி அன்னைக்கு பிடித்த ராசிகள் இவைதான்: ராஜவாழ்க்கை வாழ்வார்கள்.. உங்க ராசி என்ன?

Lucky Zodiac Signs: லட்சுமி அன்னைக்கு மிகவும் பிடித்தமான சில ராசிகள் உள்ளன. அந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 22, 2023, 12:24 PM IST
  • சமய அறிஞர்களின் கருத்துப்படி ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன்.
  • இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னைக்கு மிகவும் பிரியமானவர்கள்.
  • இவர்களது வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வருவதில்லை.
லட்சுமி அன்னைக்கு பிடித்த ராசிகள் இவைதான்: ராஜவாழ்க்கை வாழ்வார்கள்.. உங்க ராசி என்ன? title=

அன்னை மகாலக்ஷ்மிக்கு பிடித்த ராசிகள்: அன்னை லட்சுமி செல்வத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவரது அருட்பார்வை நம் மீது பட்டுவிட்டால், நமக்கு வாழ்வில் எந்த வித குறையும் இருக்காது. அவர் மனது வைத்தால், நம் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி கூட எடுக்காது. செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அவர் அளிக்கிறார்.

அனைத்தையும் தனக்கு தனக்கு என வைத்துக்கொள்ளாமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து, சமூக பணிகளிலும், அறம் வளர்க்கும் பணிகளிலும் நாம் பயன்படுத்தினால், அன்னை லட்சுமி நமக்கு இன்னும் அதிக செல்வத்தை வாரி வழங்குவார். லட்சுமி அன்னைக்கு பிடித்த செயல்களை செய்து அவரை பூஜித்து வந்தால், ஏழ்மை நம்மை அண்டாமல் அவர் நம்மை காத்து அருள்வார்.

அன்னைக்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சரிசமம் தான். எனினும், லட்சுமி அன்னைக்கு மிகவும் பிடித்தமான சில ராசிகள் உள்ளன. அந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் இருக்கும். அவர்கள் வாழ்வில் அனைத்து காலகட்டங்களிலும் பணத்துக்கு பஞ்சமிருக்காது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அன்னை லட்சுமிக்கு பிடித்த ராசிகள்

விருச்சிக ராசி

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். அவர் வீரம், வலிமை, தைரியம் மற்றும் வலிமையைக் கொடுப்பவர். இந்த சாகச குணங்களின் காரணியாக அவர் இருக்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும். இவர்கள் வேலை-வியாபாரத்தில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்கள்.

சிம்ம ராசி

சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் மன்னனாக இருக்கிறார். அவரை போலவே சிம்ம ராசிக்காரர்களும் உறுதியான ஆளுமை படைத்தவர்களாக இருப்பார்கள். சூரியனின் கூர்மை, உற்சாகம் மற்றும் உறுதியின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களிடமும் காணப்படுகின்றது. அப்படிப்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு லட்சுமி அன்னையின் அருள் எப்போதும் இருக்கும். இவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனால், அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

ரிஷப ராசி 

சமய அறிஞர்களின் கருத்துப்படி ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மகிழ்ச்சி-செல்வம் மற்றும் செல்வம்-தானியங்களின் அம்சம் கொண்டவராக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னைக்கு மிகவும் பிரியமானவர்கள். இவர்களது வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வருவதில்லை. இவர்கள் நுழையும் அனைத்து துறைகளிலும் வெற்றி காண்கிறார்கள். 

துலா ராசி

துலா ராசியின் அதிபதியும் சுக்கிரன் தான். சுக்கிரன் செல்வத்தையும் செழிப்பையும் தருபவராகக் கருதப்படுகிறார். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தால், துலா ராசிக்காரர்களின் வாழ்க்கை என்னும் வாகனம் எப்போதும் தடை இல்லாமல் ஓடும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த விதமான பெரிய பிரச்சனையையும் சந்திக்க மாட்டார்கள். இவர்களது குடும்ப வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும். 

கடக ராசி 

ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் கடக ராசியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். சந்திரன் மகிழ்ச்சி, மனம் சார்ந்த விஷயங்கள் மற்றும் தாய்க்கு சேவை செய்யும் பண்பு ஆகியவற்றின் காரணிகளாக கருதப்படுகிறார். லக்ஷ்மி தேவி தன் அதிகபட்ச ஆசிகளை கடக ராசிக்காரர்கள் மீது பொழிவதாக கூறப்படுகிறது. இவர்களது வீடுகளில் எப்போதும் செல்வம் நிரம்பியிருக்கும், சமுதாயத்தில் புகழ் பெறுவார்கள். அலுவலகத்தில் பெயரும் புகழும் எப்போதும் நிலைத்திருக்கும். வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை பெறுவார்கள். இவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விஷ்ணுவுக்கு வியாழன் அன்று 5 மஞ்சள் பரிகாரங்கள் செய்தால் பணமும் செல்வமும் கூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News